பக்கம்:நற்றிணை-2.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ರಿறிணை தெளிவுரை 409 வந்துள்ள அவனிடம், "நின் காதலி நின் களவிடைச் சிறு பிரிவையும் ஆற்ருது வருந்தும் துயரமோ மிகப் பெரிது. அதனை: எம்மால் ஆற்றவியலாது. நீயே ஏற்பன கூறி ஆற்றுவித்துப் போவாயாக’ என்று கூறுவதன் மூலம், விரைவிலே வரைந்து வந்து மணத்தலே சிறப்பு என்னும் நினைவினை அவனுக்கு ஏற்படச் செய்கின்றன்ஸ். இவ்வகையில் அமைந்த செய்யுள் இது.) உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே விரிகதிர் ஞாயிறும் குடக்குவாங் கும்மே நீரலைக் கலையிய கூழை வடியாச் சாஅய் அவ்வயிறு அலப்ப உடனியைந்து ஓரை மகளிரும் ஊர் எய் தினரே . 5 பல்மலர் நறும்பொழில் பழிச்சி யாம்முன் சென்மோ சேயிழை என்றனம், அதனெதிர் சொல்லாள் மெல்லியல் சிலவே-கல்லகத்து யாணர் இளமுலை கனய மாணெழில் மலர்க்கண் தெண்பனிக் கொளவே. 10 தெளிவுரை : அச்சம் பொருந்திய தெய்வமும் மறைந் திருக்காமல் நடமாடியபடியிருக்கும். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேலைத்திசைக்குச் சென்று மறையும். ஒரையாடிய மகளிரும், நீர் அலைத்தலாலே கலைந்துபோன கூந்தலைப் பிழிந்து நீரை வடித்தவராக, துவண்டு, அழகிய வயிருனது பசியாலே வறுத்த, ஒருசேரக் கூடியவராக ஊரைவந்து சேர்ந்தனர். பலவான மலர்களையுடைய நறும் சோலையிடத்தே, நின் காதலியைப் பாராட்டிப் பேசியபடியே, யாம் முன்னே செல்வோமா? என்று கேட்டணம். அதற்கு எதிராக, மென்மைத் தன்மையினளான அவள்தான் சிலவான சொற்களேனும் உரைத்தாளில்லை. நல்ல மிார்பினிடத்தே, புத்தெழில் பெற்றுள்ள இளைய கொங்கைகள் நனையும்படியாக மாட்சிமைகொண்ட எழிலோடுங்கூடிய குவளைமலர் போன்ற கண்கள் தெளிந்த கண்ணிரைக் கொள்ளக் கலங்கி நின்றனள். அவளை நீயே தேற்றிச் செல்வாயாக என்பதாம். கருத்து அவள் நின் களவிடை இடையீடுபடும் பிரிவை யும் பொறுத்திராது புலம்பும் தன்மையள் ஆயினுள் என்பதாம். ந.-26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/413&oldid=774606" இலிருந்து மீள்விக்கப்பட்டது