பக்கம்:நற்றிணை-2.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 நற்றிணை தெளிவுரை போட்ட கதிர்ச்சூட்டின் பக்கத்தே வாளை மீன்கள் பிறழும் வளமான ஊர் என்றனர். வாழையின் பூவை வளர்ந்து அசைத்த நெற்பயிர்போலத் தலைவியின் காதல்வாழ்வைத் தன்னுடைய இளமை நலத்தால் படர்ந்து அலைவித்தனள் பரத்தை வாயிலர்கள் அவள் உறவை முடித்துப் போட்டது கதிர் அறுத்துப்போட்ட சூட்டினைப்போன்றதாம். சூட்டயலிலே வாளைமீன் பிறழ்தல் போலப் புதிய பரத்தையர் அவள் எதிரேயே அவன்ைக் கொண்டு செல்லக் காத்திருப்பவராயினர் என்பதாம். விளக்கம் : வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி என்றது, நெல்லானது செழித்து வளர்ந் துள்ளபோது, வாளையின் மெல்லியவான் தாற்றின் நுனிப் பூவானது கவிந்து வந்து அவற்றின் அளவுக்குத் தாழவும், அந் நெற்பயிர் காற்ருல் அசையும்போது, அப் பூவையும் ஆட்டு விக்கும் என்ற்னர். இளமைச் செழுமைக் கவிேைல செருக் குற்ற பரத்தையரைக் கண்டதும், தலைவன் தன் தகுதி தாழ்ந்து அவர் உறவை நச்சிவந்து சார, அவர்கள் தம் அன்னையரால் ஏவும்பொழுதெல்லாம் அவனே அதற்கேற்றபடி ஆடச் செய்வர் என்பதாம். சூட்டயலிலே வாளை பிறழும் என்றது, அடுத்து வரும் தன் அழிவை நினையாத அறியாமையால் ஆகும். அவ்வாறே பரத் தையர் பலரும் தலைவனைச் சூழ்ந்து ஆடியும் பாடியும் அவனைக் கவர்தற்கு முயல்வர் என்பதாம். அன்றித் தன்ைேடு உறவாடி யிருந்த நெற்பயிர் அறுப்புண்டு வெளியேபோவது கண்டும், கவலாது பிறழும் வாளை மீன்போல,தலைவன் பிரிவைக் கண்டும் கவலாது, மீண்டும் அவனைத் தன்பால் ஈர்க்க முயன்றனள் பரத்தை என்பதுமாம். . பயன் : இதனால், தலைவன் அவள்பால் வெறுப்பு அடையாத வகை மீண்டும் அவளை விரும்பி வருதலும் கூடும் என்பதாம், இத்தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பன்னிரண்டு அடிகாறும் உயரப் பெற்றது: - இத்தொகை தொகுப்பித்தான் பன்னடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. நற்றின நானூறு மூலமும் புலியூர்க் கேசிகன் தெளிவுரையும் முற்றுப்பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/418&oldid=774616" இலிருந்து மீள்விக்கப்பட்டது