பக்கம்:நற்றிணை-2.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 418 - நற்றிணை தெளிவுரை போவதான இந்த வருத்தத்தைப் போக்க மாட்டாயோ? என்று என்னிடத்தே நின் குறையினைச் சொல்லுதற்கும் முற்படுவாய் ஆயின! நின் சொற்கள் எம்மால் நிறைவு செய்தற்கு இயலாதன வாதலின் குற்ையுள்ளனவேயாகும் என்று அறிவாயாக என்பதாம். கருத்து : தலைவியை நீ அடைவது முடியாதது என்பதாம். சொற்பொருள் : நெருநல் - நேற்றைக்கு. முன்னுள் . அதற்கு முந்தின் நாள். எல்லை - பகல்வேளை. ஒரு சிறை - ஒரு பக்கம். நேர் இறை - நேரான முன் கை. எம் பதத்து - எம்முடைய நிலைக்கு. கட்காண் கடவுள் கண்ணெதிரே காணக் கூடிய தெய்வம். மணிவரை - கருமணி போலும் மலை. விளக்கம் : துஞ்சும் புலிதான் தனக்குத் தடவித் தருவதற்கு எதனையும் நாடாத போதும், மிளகுக் கொடி தானே அதன் முதுகைத் தட்வித் தந்து இன்பம் தருதல் கூறினுள். அவ்வாறே நீயும் நீ எதிர்பார்த்தற்கு உரியதல்லாத தலைவியின் உறவின்பத்தை அடைதலும் கூடும் என்றனள். "கட்காண் கடவுள் அல்லளோ? என்றது தலைவியின் சீர்மையை உயர்த்து, வியந்து கூறியதாம். பயன் : இங்ங்ணம் மறுத்துக் கூறினலும், அவன் நிலை யறிந்து இரக்கமுற்றுத் தலைவியை இசைவிக்கவும் தோழி உதவுவாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/422&oldid=774623" இலிருந்து மீள்விக்கப்பட்டது