பக்கம்:நற்றிணை-2.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 423 இளவெயினர்ை 263 - எயினன் என்னும் பெயருடைய இவர் வேட்டுவக் குடியின ராகலாம். இளமை பருவம் குறித்தது. கடுவன் இளவெயின்னர் வேறு; இவர் வேறு என்று அறிதல் வேண்டும். இச்செய்யுளில் கரப்பவும் கரப்பவும் கைமிக்கு வழியும் கண்ணிர்பற்றிக் கூறித் தலைவியின் மனத்துயரை எடுத்துக் காட்டுவர் இவர் சூலுற்ற பேடைக்கு, நாரை கடல்மீன் கொண்டுதந்து காக்கும் அன்பினை யும் எடுத்து காட்டுவர். . உரோடகத்துக் கந்தரத்தனர் 306 இவர் கந்தர் அத்தனர் எனும் பெயரினர். உரோடகம் என்னும் ஊரினர். இது இந்நாளில் ஒரகடம் என வழங்குவது என்பர். இதல்ை, வேறு கந்தரத்தனர்களும் பண்டைநாளில் இருந்தமை அறியலாம். வண்ணப்புறக் கந்தரத்தனர் என்பவர் இந்நற்றிணையின் 71ஆம் செய்யுளைச் செய்தவராவர். திணைக்கதிர் கொய்தபின் தாள் மட்டுமே நிற்கும் அழிபுனத்துக்கு, விழா நிகழ்ந்து கழிந்த களத்தை உவமித்த சிறப்பினர் இவர். உலோச்சஞர். 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398 . - நற்றிணையுள் 20 பாடல்கள் பாடிய சிறப்பினர் இவர். இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பொறையாற்றுப் பெரியன் காலத்த்வர். இவர் ஊர் காண்டவாயில் என்ப்த்னை நற்றிணை 38ஆம் செய்யுளால் அறியலாம். மக்களின் வாழ்வுப் போக்கை உற்றறிந்து நயம்பட அமைத்துச் செய்யுள் யாக்கும் திறனுடைய இவர், நெய்தல் திணையையே சிறப்பாகப் பாடியவராவார். தாழைப்பூவின் மணம் காற்றேடு வந்து பரதவர் சேரியின் புலால் நாற்றத்தைப் போக்கும் (203); அலருரைக்கும் பெண்டிர்கள் சுருமீன்கள் போன்றவர் (223); இரும்பு, வெள்ளி, பொன் எனும் மூன்றையும் ஒரே செய்யுளில் உவமைப் பொருளாக்கிய சிறப்பு (249); வர்னம் வேண்டர் உழவின் கானலம் சேரி (254); கோதையும் எல்லாம் ஊை வ்ெண் மணலே (278); நமர் நமர் அறியாச் சேரி (331); எல்லி அன்ன இருள்நிறப் புன்னே (354); அலவன் ஆட்டி விளையாடல்,(33): திமில் விளக்கம் எண்ணுதல் (37)'; உருகெழு தெய்வம் இரவில் கரந்து உறைதல் இல்லாது வெளிப்போந்து உலவுவது (398) போன்றவர்ன் பல செய்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/427&oldid=774633" இலிருந்து மீள்விக்கப்பட்டது