பக்கம்:நற்றிணை-2.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 நற்றிணை தெளிவுரை களை இவர் செய்யுட்கள் நமக்கு எடுத்துக் காட்டும். புன்னைக்குத் தான் எத்தனை உவமைகள்! இவர் பாடல்களின் போக்கும் பிறவும் இவரைக் கடற்கரைப் பட்டினத்துப் பரதவர் குடிவந்த தமிழ்ப் பேரறிஞராகவே காட்டுகின்றன. இந்நாளிலும் தென் மாவட்டங்களில் உவச்சர் என்பேர்ர் காள்கோயிற் பூசா களாக உள்ளனர். இதல்ை, உலோச்சர் என்பதும் வேலன்' போல ஒரு பெயர் எனவும் கருதலாம். உறையூர்க் கதுவாய்ச் சாத்தனர் 370 உறையூரின்கண் வாழ்ந்த இவர் சாத்தனர் என்னும் பெயரினர். சாத்தன் என்பது தொழிலும் ஆகலாம். கதுவாய்' ஏணிச்சேரிபோல உறையூரின் பகுதி என்பார்கள். மேற்கது வாய் கீழ்க்கதுவாய் என்பன பழங்காலக் கணிதத்தின் வாய் பாடுகள் என்றும் அறிகின்ருேம். அவற்றுள், இவர் சிறந்த அறிவுபெற்றுத் திகழ்ந்தவர் என்று கருதுவதும் பொருந்தும். இச் செய்யுள் அரியதொரு இல்லற ஒவியமாகும். மகனைப் பெற்ற வாலாமையோடு படுத்திருக்கும் மனைவியைச் சென்று பார்த்துக் கணவன், புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்ந்து, அவ்வரித் திதலை யல்குல் முதுபெண்டாகித் துஞ்சுதியோ!' என மிகவும் வியப்பதும், அவள், முகை நாண் முறுவல் தோற்றித் தகைமலர் உண்கண் புதைப்பதும்'. மறக்கமுடியாத குடும்பக் காட்சிகளாகும். எயினந்தை மகளுர் இளங்கிரளுர் 269, 308, 346 இவர் வேடர் குலத்தவர். எயினந்தையாரின் மகனர். பாடல்கள் பெரிதும் பாலைத்திணை சார்ந்திருப்பன என்பதும் இவர் எயினர் குடியினர் என்பதற்குச் சான்ருக விளங்கும். அகம், குறுந்தொகை ஆகியவற்றுள்ளும் இவர் செய்யுட்களைக் காணலாம். அந்தில் இளங்கீரனர், பொருந்தில் இளங்கீரனர் ஆகியோர் வேறு; இவர் வேறு. புதல்வனைப் பெற்றவளைப் பிரியும் தலைவனை நினைந்து, அவள் துயரநிலையை ஓவியமாகப் படைத்துள்ள 269 ஆம் செய்யுள் மிகச்சிறந்த உயிர்ச்சித்திரம் ஆகும். பிரிவை நினைந்து செயலற்றவளுக்கு, பொறியழி பாவையின் கலங்கி எனக் கூறுவது கொண்டு, அக்காலத்தில் பொறியமைத்து இயங்கச் செய்யும் பாவைகள் சமைக்கும் கைவினைஞரும் தமிழ் நாட்டில் இருந்தனர் எனலாம் (306): ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/428&oldid=774635" இலிருந்து மீள்விக்கப்பட்டது