பக்கம்:நற்றிணை-2.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கள் 485 ஏற்ருங்கு' என்று கொண்ட முடிவு முற்றவும் அழிந்து போவதற்குக் காட்டும் உவமை மிகவும் ஆழமானதும் அருமை யானதும் ஆகும். போர்முனைப் பாசறையிலிருந்து மனைவியை நினைத்து உருகும் தலைவனின் வேதனையும் சிறந்தவோர் உருக்க மான ஒவியமாகும் (346). ஐயூர் முடவர்ை 206, 334 இவர் ஐயூர் என்னும் ஊரினர்;முடவன் என்பது இவர்க்கு அமைந்த பெயராகும். இவர் அறநெறிகளை உரைக்கும் ஆற்றல் தனியொரு பேராற்றல்ாகும். மாறன் வழுதியைப் பாடிய புறப்பாட்டில், "நீர் மிகின் சிறையும் இல்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளி மிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்ருேர் அன்ன சினப்போர்வழுதி' என்று, அவன் போராற்றலைக் கூறுவது, பொன்னுரைகள் என்றே போற்றத்தக்கவை யாகும். இப்படியே, கிள்ளிவளவன் இறந்தபோது, புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை, விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன, சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன், கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் தேவருலக மெய்தினன் என்று உருக்கமாகப் பாடுகின்றனர். சொற்றிறம் பொருள் திறம் ஒலிநயம் என்னும் மூவகை யானும் சிறந்தவை இவர் செய்யுட்கள். ஆகவே 'ஆர் முழவனர்' என்று இவர் பெயர் இருந்திருக்கலாம் என்று சொல்லவும் தோன்றுகின்றது. தோன்றிக்கோன வியக்கின்ருர் இவர் அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்' சொற்கள் முழக்கமிடுகின்றன. ந.-27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/429&oldid=774637" இலிருந்து மீள்விக்கப்பட்டது