பக்கம்:நற்றிணை-2.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ / பாடிய சான்ருேர்கள் 431 காத்திருக்கும் செய்தியைக் கூறுகின்றது 281 ஆம் செய்யுள். கோடைத் திங்களும்,யாம் தன் உழையம் ஆகவும் பனிப்போள் வாடைப் பெரும்பனிக்கு என்னவாளோ? என வருந்தும் தலைவனை 312 ஆம் செய்யுளில் இவர் காட்டுவர். கள்ளிக்குடிப் பூதம்புல்லஞர் 331 இவர் கள்ளிக்குடி என்னும் ஊரினர். குறுந்தொகையின் 190 ஆவது செய்யுளைச் செய்தவரும் இவரே என்பார்கள். கள்ளிக்குடி என்பது தென் தமிழ் நாட்டுள்ள ஓர் ஊர் ஆகலாம். பல்லி ஒலிப்பதை நல்ல சகுனமாகக் கொள்ளும் மரபினை இச்செய்யுளில் காணலாம். நீங்குக மாதோ நின் அவலம், நயவரு குரல பல்லி-நள்ளென் யாமத்து உள்ளு தொறும் படுமே எனத் தேற்றுகின்ருள் தலைவியைத் தோழி. காசியன் கீரனர் 248 காசிபன் என்பவரின் மகளுர் இவர். கீரர் மரபினர். இவரைக் காப்பன் கீரனர் என்றும் கொள்வர். காசிபன் என்றும் பெயரைக் கோத்திரப் பெயராகவும் கொள்ளலாம். 'பொய்யிடியை மழைக்குரல் எனக் கருதி மயிலினம் ஆடிக் களிக்கும் மடமைபற்றிக் கூறுவது நயமான பகுதியாகும். காப்பியஞ் சேந்தனர் 246 இவரைக் காப்பியக் குடியைச் சேர்ந்த சேந்தனர் எனவும், காப்பியர் மகளுகிய சேந்தனர் எனவும் கொள்வர். சேந்தனர் என்பது பழந்தமிழகத்தில் பலர்க்கும் வழங்கப்பட்ட பெயராகும். தொல்காப்பியர், காப்பியக்குடிக் காப்பியனர் என்போரும் இந்த மரபினரே யாவர். இச்செய்யுளும் பல்லி நல்ல பக்கத்தே சொல்வது நிகழும் என்ற நம்பிக்கையை உரைக்கின்றது. நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கர்த் தேற்றும் என்று வந்துள்ளமை காணலாம். காமக்கணி கப்பசலையார் 24: . . நப்பசலையார் இவர் எனவும், காமக்கணி என்பது காமக்காணி என்பதன் மருவிய வடிவம் எனவும், அரசர்களால் காமக்கிழத்தியர்க்கு அளித்தலான காணியாட்சியாகிய நிலம் பொருள் பெற்றவர் எனவும் கருதுவர், காமக்கணி என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/435&oldid=774651" இலிருந்து மீள்விக்கப்பட்டது