பக்கம்:நற்றிணை-2.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமக்கண்ணி என்பதன் சிதைவு எனவும், வசீகரமான கண் பார்வை உடையவராதல் பற்றிக் காமக்கணி எனப் பெற்றனர் எனவும் கருதலாம்; இதுவே பொருந்தும். காமக்காணி' என்பது பழந்தமிழ் மரபிற்கே குறையாக நிற்பதாக முடியும். 'பிரிதல் ஆடவர்க்கியல்பெனின்.அரிதுமன்று அம்ம அறத்தினும் பொருளே’ என்பது மிகச் செறிவான சொற்ருெடர் ஆகும். 4.32 நற்றிணை தெளிவுரை காரிக் கண்ணனர் 237 காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனர் என்பவர் குறுந்தொகையின் 297 ஆம் செய்யுளையும், அகத்தில் 2ம் புறத்தில் 5ஆம் பாடியவர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெரும் திருமாவளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய நன்மாறன் ஆகியோரைப் பாடியுள்ளனர். அவரே இவர் எனலாம். காரிகரிக்குருவி: கருமை கருமையான கண் பெற்றவர் போலும் இவர். உள்ளடி முள்ளும் உருற்கதில்ல' என்று பிட்டங் கொற்றனை வாழ்த்தியவர் இவர். இச் செய்யுளுள், ஆய் அண்டிரன் பரிசில் வழங்குவதற்காகத் தொகுத்து வைத்திருந்த யானைகளின் மிகுதிப்ற்றி வியப்போடு கூறுகின்ருர் இவர். இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானை போல’ என்பது அத் தொடர்களாம். காவன்முல்லைப் பூதர்ை 274 இவர் காவல் முல்லைத் துறைபற்றிய செய்யுட்களை இயற்று வதில் வல்லவராயினமையாலும், பூதனர் என்னும் இயற்பெயர் உடைமையாலும் இவ்வாறு வழங்கப் பெற்றனர் என்பர். முல்லை நிலஞ் சார்ந்தவர் எனவும், காவல் தொழிலர் எனவும் கருதுவர் சிலர். குமிழ மரங்களின் பழங்கள் உதிர்ந்து கிடப்பதை 'இழை மகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் என்று நயம்பட உரைப்பர் இவர். காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனர் 389 காவிரிப்பூம் பட்டினத்தார் இவர். செங்கண்ணன் இவர் பெயர். காரிக்கண் போல இவர் கண்கள் செம்மை பெற்றிருந்தமையின் இப்பெயர் பெற்றவரும் ஆகலாம். இனிச் ச்ெங்கண் கடுங்கண்' என்பவை அரசகருமத்தவர் சிலரைக் குறிக்கும் பதவிப் பெயர் என்பதும் கூறப்படும். இவர் |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/436&oldid=774653" இலிருந்து மீள்விக்கப்பட்டது