பக்கம்:நற்றிணை-2.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à பாடிய சான்ருேர்கள் 483 கு று ந் தொகை யி ன் 347ஆம் செய்யுளைச் செய்த சேந்தங்கண்ணனர் என்பாரினும் வேருனவர் எனவும், இருவரும் ஒருவரே எனவும் வழங்குவர். கள்ளிலுக்கு உரியவனை அவியனின் மலைவளத்தை இவர் சிறப்பித்துள்ளமையால், அவன் காலத்தவராகலாம். இவர் குறிஞ்சியை மிகச்சுவையாக எடுத்துக்காட்டும் புலமையாளர் என்பதற்கு இச் செய்யுளே நல்ல சான்ருகும். சேவலொடு சிலம்பின் போகிய சிதர்கால் வாரணம், முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப்பல நன்பொன் இமைக்கும் நாடன்' என்பது, பொன்கொழிக்கும் தமிழகத்தை நம் நினைவிற் காட்டுவதாம். கிடங்கில் காவதிக் கீரங்கண்ணனர் 218 "கிடங்கில் இன்றைய திண்டிவனப் பகுதியில் இருந்த ஒர் ஊர். இவர் பெயர் கண்ணனர். காவிதிப் பட்டம்பெற்ற கீரன் என்பாரின் மகளுர் இவரர்வர். சேம்மை சான்ற காவிதி மாக்கள் என்பதல்ை, காவிதிப்பட்டம் பெறற்குரியவர் செம்மை N யாளர் என்பதும் விளங்கும். எட்டி காவிதிப் பட்டம் தாங்கிய மயிலியல் மாதர் என்பதல்ை, ஆடவர்போலவே மகளிரும் இப்ப்ட்டம் பெறுவதற்கு உரியவர் எனலாம். இவ்வூரவர்கள் கிடங்கில் குலபதி நக்கண்ணனர் (குறுந். 252), கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனர் ஆகியோரும் ஆவர். பிரிந்துறை யும் தலைவியின் மனநிலையை உருக்கமாகக் காட்டுவது இச் செய்யுளாகும். கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றஞர் 364 இவரும் கிடங்கிலைச் சேர்ந்தவர்; காவிதிப் பட்டம் பெற்றவர்; கொற்றனர் என்னும் இயற்பெயரினை உடையவர். 'பெரும் என்பது இவர்தம் சிறப்புடைமையால் சேர்ந்துள்ள அடையாகும். வரைவிடை வைத்துப் பிரிந்துபோன தலைவனின் நினைவாலே வருந்தி ந்லியும் ஒரு தலைவியின் சோகத்தை உருக்க மாகப் படம்பிடித்துக் காட்டுவது இச்செய்யுளாகும். உயிர் செலத் துனிதரு மாலை' என்று மாலைக்குக் குறித்துள்ள பண்பு ஏக்கத்தின் குரலாகும். - - கிள்ளிமங்கலங்கிழார் சோகோவளுர் 365 கிள்ளிமங்கலத்து உழவர்குடியைச் சேர்ந்தவர் இச் சான்முேர் இவர் பெயரைச் சொகிரளுர் எனவும் சிலர் \

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/437&oldid=774655" இலிருந்து மீள்விக்கப்பட்டது