பக்கம்:நற்றிணை-2.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 - 'நற்றிணை தெளிவுரை குன்றுர்கிழார் மகன் கண்ணத்தனர் 332 - கண்ணத்தன் என்னும் பெயருடையாரான இவர் குன்றுார் கிழாரின் மக்ஞர். குன்றார் என்பது குறிஞ்சிப் பகுதிச் சிற்றுார். இச் செய்யுளும் குறிஞ்சிச் செய்யுளே. குவளை குறுநர் நீர்வேட்டாங்கு, நாளும் நாள் உட்ன் கவவவும், தோளே தொல்நிலை வழிஇய் நின் த்ொடி என்று இவர் கூறுவது, சிந்தை யைப் பிணிக்கும் சிறப்பினதாகும். கடலூர்ப் பல்கண்ணனர் 380 கூடலூர்ப் பல் கண்ணனர் எனவும் இவர் பெயர் வழங்கும். 'பல் கண் என்பது வண்ணக்கண் போன்று அரசகருமத்துள் ஒன்றெனவும் கருதுவர். அதனைச் செய்து வந்தவர் இவராகலாம். ஊர் விழாவைக் குயவன் சென்று ஊராருக்கு அறிவிப்பதை இவர் நற்-200இல் காட்டுவர். இச் செய்யுளில், தன் தலைவனின் பரத்தமையால் மனம் நொந்த தலைவியானவள். அவன் பாணனிடம், - 'நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும் திதலை மென்முலைத் தீம்ப்ால் பிலிற்ற் புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்...' - للا என்று சொல்வதாக அமைந்துள்ள சொற்கள், ಶ್ಗ சித்திரங்கள் என்று கூறலாம். இவர் நடுகாட்டுக் கூடலூரினிச் என்பர் சிலர். கூற்றங் குமரஞர் 244 குமரனர் என்னும் பெயரினர் இவர், சல்லியங்குமரனர் என்ருற்போல. கூற்றணின் மகளுர் இவரெனவும், கூற்றம்’ என்னும் நிலப்பகுதிக்குத் தலைவராயிருந்தமையினல் கூற்றங் குமரனர் எனப் பெற்றனர் எனவும் கருதுவர். வண்டைத் தன் துயரத்தை எடுத்துச் சொல்லுமாறு கேட்பதாக அமைந்த இச் செய்யுள் மிகவும் வளமையுடையதாகும். கொற்றங் கொற்றஞர் 244 கொற்றனர் பெயரால் வழங்கும் நற். 31 ஆவது செய் யுளைப் பாடியவர் ஒருவர்; இவர் வேறு ஒருவர். செல்லூர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/440&oldid=774663" இலிருந்து மீள்விக்கப்பட்டது