பக்கம்:நற்றிணை-2.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dr4ು ಆTErdyfಹಣಿ! 444 நெகிழ்ச்சிகள் கலக்கங்களையும் வளமான சொற்களால் வகையுற அமைத்துக் காட்டி வான்புகழ் பெற்றவர் இவர், இவரைப் பாணர் மரபினர் என்பர். ஆதியில் பரண்காவல்' மேற்கொண்டிருந்த காரணத்தால், பெரும்புலவரென மதிக்கப் பெற்ற பின்னரும், அப் பெயரே பெயராகப் பெற்று நிலவலா யிற்று என்றும் கருதலாம். பாண்டியன் மாறன் வழுதி 301 இவன் பெயரே இவனைப் ப்ாண்டிய மன்னர் குடியினன் என்று காட்டும். தன் மகள் கன்னிமை எழிலிலே நாளுக்குநாள் கவின்பெற்று விளங்கக் கண்டு வியந்து வியந்து தாய் பாராட்டிப் பேணுவதாக அமைந்த இச் செய்யுள் மிகவும் செறிவானது ஆகும். உவமைகள் துள்ளிவந்து அழகு செய்கின்றன. - மேனி, குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனி கண், மலர்பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண் சாயல், மயில் ஒரன்ன சாயல் கிளவி, செந்தார்க் கிளிஒரன்ன கிளவி தோளி, பணைத்தோள் வனப்பு, பாவையன்ன வனப்பு என்று ஓவியப்படுத்தும் புலமை நயம் உடையவர் இவர். பாலபாடிய பெருங்கடுங்கோ 202, 224, 256,31, 337, 384, 391 சேர மன்னர் குடியினருள் கடுங்கோ மரபில் தோன்றியவர். பாலைத் திணை பாடுவதில் வல்லவர். கலித்தொகையுள் செறிவுடைய பாலைக்கலியோடு, மற்றும் சங்கநூற்களுள் 23 செய்யுட்களும் இவர் பெயராற் காணப்படும். போர் மறவனை யும் வியந்து, சேண்விளங்கு நல்லிசை நிறீஇ நாநவில் புலவர் வாயுளானே' என்று பாராட்டிய மன்னன் இவன். 'கிழவர். இன்னேர் என்னது பொருள்தான் பழவினை மருங்கில் பெயர்பு பெயர்பு உறையும் (கலி. 21) என்று தத்துவம் காட்டுபவன் இவன். இவனே பெருஞ்சேரல் இரும்பொறை என்ப்தும் பொருந்தும். அறுமீன் கெழிஇய அறம் செய் திங்கள் செல்சுடர் இநடுங்கொடி போல (202) என்று கார்த்திகை விளக்கீட்டைக் க்றியுள்ளவன் இவன். இதல்ை, கார்த்திகைப் பெருவிழாவும் அது பற்றிய தமிழர்களின் நம்பிக்கையும் மிகமிகப் பழமை யுடைய்ன் என்பதனை அறியலாம். புணர்ந்தீர் புணர்மினே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/447&oldid=774678" இலிருந்து மீள்விக்கப்பட்டது