பக்கம்:நற்றிணை-2.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 நற்றிணை தெளிவுரை என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும்' இன்ப வேனிலை 224ஆம் செய்யுளிற் காணலாம். உலகம் படைத்தகாலை, தலைவ! மறந்தனர் கொல்லோ சிறந்திசினேரே! (337) என்று கேட்பவன் இவன். பிரிய நினைக்கும் தலைவனிடம் "நாண்விட்டு அருந்துயர் உழந்த காலை மருந்து எனப்படுஉம் மடவோள் (381), எனத் தலைவியை அறிமுகப் படுத்தும் பண்பினன் இவன். நன்னன் நல் நாட்டு ஏழிற்குன்றம் பெறினும், பொருள் வயின் யாரோ, நின் கண் தெண்பனி கொள்ப் பிரிகிற்பவர்?’ என்று தலைவியைத் தோழி தேற்றுவ தாகக் காட்டும் 391 ஆம் செய்யுள், பிறர் நாட்டுச் சிறப்பையும் வியந்து போற்றும் இவனது மனச்செவ்வியைக் காட்டுவ தாகும். புதுக்கயத்து வண்ணக்கண் கம்பூர் கிழான் 294 கம்பூர் கிழான் என்னும் பெயரோடு விளங்கிய இவர் வேளாண் மரபினர். புதுக்கயம் என்னும் பகுதியிலே வண்ணக் கண்' என்னும் பொறுப்பேற்று வாழ்ந்தவர். உள்ளே கனன்று எரியும் காமநோயினை, தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு என வெம்மை புலப்பட எடுத்துக்காட்டிய புலமைத் திறத் தினர். பெருங்குன்றுர் கிழார் 347 குன்றுர் போலவே பெருங் குன்றுார் என்பதும் பழைய காலத்து ஊர்களுள் ஒன்ருகலாம். அவ்வூரின் வேளாண் மரபினர் இவர் ஆகலாம். இனி இச் செய்யுளுள் வரும் பெருவரை நாடன்' என்னும் குறிப்பால் இப்பெயர்பெற்றனர் என்றும் கருதுவர். குறிஞ்சித் திணைச் செய்யுள் இது. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையை பதிற்றுப் பத்துள் ஒன்பதாம் பத்திற் பாடிய சிறப்பினர் இவர். பெருந்தலைச் சாத்தனர் 262 இவரைப் பெருந்தலையூர்ச் சாத்தனர் என்றும் கூறுவர். சீத்தலை, பெருந்தலை என்பன அக்காலத்து ஊர்களாகலாம். சீத்தலைச் சாத்தினரினும் பிரித்துக் காட்ட இவரைப் பெருந் தல்ைச் சாத்தனர் என்றனர். இனி, சீத்தலை, பெருந்தலை எனும் இவையே வாணிக மரபினருள் சாத்துடையோர்க தகுள நிலபற்றியமைந்த தகுதிகளும் ஆகலாம். இவளின் தீர்த்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/448&oldid=774680" இலிருந்து மீள்விக்கப்பட்டது