பக்கம்:நற்றிணை-2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்றேர்கள் 445 ஆள்வினை வலிப்பப் பிரிவு நன்று என்னு மாயின், இன்மையது - இளிவு அரிதுமன்றம்ம" என்று, காதலன் மனம் வருந்துவதாகக் காட்டுவது இச் செய்யுள். - பொதும்பில்கிழார் மகளுர் வெண்கண்ணியார் 375, 387 'பொதும்பில் பழம் பேரூர்களுள் ஒன்று. அவலுர்ப் புலவர் களுள் நக்கர்ை ஒருவர்; இவர் மற்ருெருவர். பொதும்பில் கிழார் மகளுர் என்பதல்ை, இவ் வெண் கண்ணியார் அவர் மகன் எனலாம். வெண்கண்ணி என்பது இவர் பின்னர் வாழ்ந்த ஊரின் பேரும் ஆகலாம். சில பதிப்புகளில் 387 ஆம் செய்யுள் பொதும்பில் கிழார் பாடியதெனவும் காணப்பெறும். 'உரவுத்திரை எறிவன போல வரூஉம் என்பார் இவர் (375). 387 ஆம் செய்யுள் தலையாலங்கானப் போர் வெற்றி பற்றிக் குறிப்பிடுவதனால், இவரை அக்கால வட்டத்தினர் என்று கருது வதும் பொருந்தும். மடல்பாடிய மாதங்கீரளுர் 377 இவர் மடல்பற்றிப் பாடியதல்ை இப்பெயர் பெற்றவர். இச் செய்யுளும் மட்டல் பற்றியே வந்துள்ள மனங்கசியச் செய்யும் செய்யுளாகும். கீரர் குடியினர் எனவும், தங்கால் என்னும் பாண்டிப் பதியினர் எனவும் கருதலாம். மா - சிறந்த; தங்கால் கீரனர் என்று அப்போது கொள்க. - மதுரை அளக்கர் ஞாழார் மகளுர் மள்ளனர் 297, 321 "ஞாழல்' என்பது கடற்கரைப் பாங்கில் செழித்து வளரும் மரவகை. அவ்வகை மரங்கள் செறிந்த ஊர் ஞாழல்' என்று பேர் பெற்றிருக்கலாம். மள்ளன்' என்பது இவர் படைமறவர் என்பதைக் காட்டும். 217 ஆம் செய்யுள் குறிஞ்சி; 317 ஆம் செய்யுள் முல்லை. கான முல்லைக் கயவாய் அலரி பார்ப்ப்ன மகளிர் சாரற் புறத்து அணிய' என்று இவர் அக் காலத்துப் பார்ப்பன மகளிரது இயல்புகளுள் மலர் சூடும் மரபைக் குறிப்பிட்டுக் காட்டுவர் (321). மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர். 344 மதுரையில் அறுவை வாணிகம் (துணி வாணிகம்) செய்து வந்தவர் இவர் புலி முழக்கை இடிமுழக்காக நினைத்து, காயுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/449&oldid=774682" இலிருந்து மீள்விக்கப்பட்டது