பக்கம்:நற்றிணை-2.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 நற்றிணை தெளிவுரை யுடையது என்பது பொருள். வாணிக வளத்தாலும் பிற வளத் தாலும் சிறப்புற்றிருக்கலாம். நப்பசலையார் பாடிய பாடல்கள் பிற தொகை நூல்களிலும் காணப்படும். புணரிற் புணருமார் எழிலே, பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாய, என் அணிநலம் சிதைக்குமார் பசலை எனப் பசலையை நயம்பட இச் செய்யுளிற் கூறுவதாலும் இவர் நப்பசலை' எனப் பெயர் பெற்றிருக்கலாம். அசுணங் கொல்பவர் கைபோல், -விறலோன் மார்பு - நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே' என்று பிரிவின் கொடுமையை இவர் மனமுருக எடுத்துரைப்பர். மிளகிழான் நல்வேட்டனர் 210, 349 நல்வேட்டன் என்னும் பெயருடைய இவர் மிளை என்னும் பகுதிக்கு உரிமைபெற்று மிளை கிழான் எனப் பெற்றனர்ாக லாம். மிளை - காவற்காடு; ஆகவே, இவ்வூர் காவற்காடு சூழ்ந் திருந்த ஊர் என்பதும் அறியப்படும். இவர் செய்யுட்கள் உலகியல் அறத்தை நுட்பமாக உரைப்பதுடன், இயற்கை எழிலேயும், மக்கள் வாழ்வியலையும் நன்கு ஒவியப் படுத்தும் செறிவு பெற்றனவுமாகும். "நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று, தம் செய்வினைப் பயனே! சான்ருேர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே என்று திட்பமாக உரைத்த செவ்வியர் இவர் (210) இவருடைய நெய்தற் செய்யுள் காமநோயால் வருந்தும் தலைவனின் நெஞ்சத்தின் நல்ல படப்பிடிப்பு ஆகும் - 349. முக்கல் ஆசான் கல்வெள்ளையார் 272 முக்கல் என்னும் ஊரினர்; ஆசிரியர் தொழில் செய்தவர்: வெள்ளையார் என்னும் பெயரினர். என் சிறும்ை அம்பல் மூதூர் அறிந்தது, அது யான் கொண்ட நோயினும் பெரிதாக என்னை வருத்துகின்றது எனத் தலைவியின் மனத்துயரைக் காட்டும் வர் செய்யுள் உருக்கமானதாகும். முடத்திருமாறன் 228 மாறன் என்னும் பெயர் இவரைப் பாண்டிய மரபினர் எனக் காட்டும். ஒளவையவர்கள் இவனைத் தொண்டை நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/456&oldid=774700" இலிருந்து மீள்விக்கப்பட்டது