பக்கம்:நற்றிணை-2.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்றேர்கள் - 453 ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவன் எனவும், அதன் பழம் பெயர் திருமுட்டம் என்பதால் முட்டத் திருமாறன் என்பதே பெயர் எனவும் கூறுவர். இடைச் சங்கத்து இறுதியில் பாண்டிய நாட்டை அரசாண்டவன் முடத்திரு மாறன் என்று இறையனர் களவியலுரையால் அறியப்படுவதால். இவனைத் தொண்டை நாட்டுக்கு இழுப்பது சிறிதும் பொருந்து மாறில்லை. இவன் "குட்டுவனின் குட வரையை எடுத்துக் காட்டியவன் (நற் 105). வரிகொள் சாபத்து எறிகணை என்று வில்லுக்கு சாபம் என் னும் வேற்று மொழிச் சொல்லை எடுத்தாண்டவன் இவன். முதுவெங் கண்ணளுர் 232 முது வெண் கண்ணனர் எனவும் சிலர் கருதுவர். இளங் கண், செங்கண்' என்னும் பெயர்கள் அந்நாள் பெருவழக்கா யிருந்தவை. பாண்டி நாட்டு பொதும்பில் வெண்கண்ணன ரினும் வேறுபடுத்த இவரை முதுவெண்கண்ணனர் என்றனர் எனினும் பொருந்தும். வேங்கை வீயுக விரிந்த முன்றில் கல்கெழு பாக்கம்' எனக் காட்டுவது இவருடைய ஊர் என்றே கொள்வதும் பொருந்துவதே யாகும். முப்பேர் ளகளுர் 314 - இவர் நாகனர் என்னும் பெயரினர். முப்ப்ேர் என்னும் ஊரினர். முப்பூர், முப்பையூர் என்றிருக்கலாம் என்பர். முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தான்; வாழ்நாள் வகையளவு அறிநரும் இல்லை' என்று நிலையாமைபற்றிக் கூறும் இவர் சொற்கள் பொன்போன்றவை. மோசி கீரஞர் 342 இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் சிறப்பித்துப் போற்றப் பெற்றவர். மோசி' என்னும் குடியினர் என்பது; அல்லது மோசியூரினர் எனலாம். மோசிக் கண்ணத் தன், மோசிசாத்தன், மோசிகரையன், மோசிகொற்றன் எனப் பலர் மோசிப்புலவர்கள் ஆவர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் பெயரை நினைத்தால் மோசி என்பவர் மகளுர் கீரனர் என்றே கொள்ளத் தோன்றும். “நின்வயின் சேரி சேரா வருவோர்க்கு, என்றும் அருளல் வேண்டும், அன்புடையோய்' என்று. வீட்டுக்கு வந்தவரை உபசரிக்கும் கடமையைக் காட்டித் தலைவனுக்கு இரங்குமாறு தலைவிக்குக் கூறுபவர் இவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/457&oldid=774702" இலிருந்து மீள்விக்கப்பட்டது