பக்கம்:நற்றிணை-2.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* M \. பாடிய சான்றேர்கள் 455 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனர் 242 பெருங்கண்ணனர் இவர் பெயர். மடமான் விழிக்கட் பேதையோடு என மான்கன்றை வியந்து கூறியமையால் இப் பெயர் பெற்றனர் எனலாம். அருமையான முல்லைத் திணைச் செய்யுள் இது. , விற்றுற்று வண்ணக்கண் தத்தனர் 298 விற்றுாற்று என்பது பாண்டி நாட்டுளதாயிருந்த ஒர் ஊர் என்பர். வண்ணக்கண் தொழில். தத்தன் இவர் பெயர். இவர் பொற்றேர்ச் செழியனின் கூடலைப் போற்றியுள்ளார். தலைவியைப் பிரியவும் மாட்டாது, பொருள் தேடிவருதலையும் மறக்கவியலாது ஊசலாடும் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தும் சிறந்த ஒவியம் இச் செய்யுள் எனலாம். - வினைத்தொழிற் சோக்ரஞர் 319. இவர் சங்கறுக்கும் தொழிலில் வினைத்திறத்தோடு விளங் கிய சிறப்பால் இப் பெயர் பெற்றவராகலாம். இச் செய்யுள் பழங்கால நெய்தல் மக்களின் நம்பிக்கைகளையும் நமக்குக் காட்டும். அணங்குகள் இரவுப் போதில் நடமாடும்' என்றும் அறிகின்ருேம். தலைமகன் தலைமகளை நினைந்து துஞ்சுதல் பெருனய், மீன் கண் துஞ்சும் பொழுதும், யான் கண் துஞ்சேன், யாதுகொல் நிலையே' என்று வேதனைப்படுவதைக் காட்டுவர் இவர். - r வெள்ளி வீதியார் 335, 348 மதுரை வெள்ளியம்பலத் தெருவில் இருந்தவர். பிரிவு நினைந்து இரங்கலாக இவர் செய்த 14 செய்யுட்களைச் சங்கநூற் களுட் காணலாம். காலே பரிதப்பினவே, கண்ணே நேர்க்கி நோக்கி வாள் இழந்தனவே என்று பிரிவு நோயின் கொடுமையை இவர் குறுந்தொகையுள் (44) காட்டுவர். இவர் செய்யுட்கள் சோக கீதங்கள் எனத் தகுந்தவை. காமம் பெரிதே களைஞரோ இலரே: என்னும் சொற்கள் எத்துணைச் சோகத்தின் புலம்பல் என்பதை நினைந்து உருகினற் காணலாம் (335). என்னெடு பொரும்கொல் இவ் உலகம்? உலகமொடு பெரும்கொல் என் அவலம் உறு நெஞ்சே?' என்னும்போது கரைகடந்து உயிரை வதைக்கும் பிரிவுக்கொடுமையை நாமும் 'உணரலாம் (348.) - - .*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/459&oldid=774706" இலிருந்து மீள்விக்கப்பட்டது