பக்கம்:நற்றிணை-2.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 - நற்றிணை தெளிவுரை பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நூங்கொடு பெயரும், ஆதி அருமன் மூதூர்' என இவன் ஊர்ச் சிறப்பைக் குறுந் தொகையுள் கள்ளில் ஆத்திரையனர் வியந்து போற்றுவர். காக்கைகள், இடப்பெறும் கருணைச் செந்நெல் வெண்சோற்றுச் சூருடைப் பலியினைக் கவரும் பொருட்டாகக் கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும், மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி என்று இவனுாரில் உள்ளார் காக்கைக்குப் பலிச்சோறு இட்டுப் போற்றும் சிறப்பினை நக்கீரனர் இச் செய்யுளிற் கூறுவார். ஓரி 265, 320 இவன் தொல்லிமலைத் தலைவூன். வில்லாற்றலிற் சிறந் தோகை, வல்வில் ஓரி எனப் பாராட்டப் பெற்ற சிறப்பினன். வன்பரணரால் பாடிப் போற்றப்பெற்ற பெருமையன். இவனைக் காரி படையெடுத்துச் சென்று சேரர் பொருட்டாகக் கொன்றனன் என்று வரலாறு கூறுகின்றது. மாரிவண் மகிழ் ஓரி கொல்லிக் கலிமயில் எனப் பரணர் 265 ஆம் செய்யுளிலும், பழவிறல் ஒரிக்கொன்ற ஒரு பெருந்தெருவில் காரி புக்க நோரர் புலம்போல் கல்லென்றன்ருல் ஊரே எனக் கபிலர், காரி இவனைக் கொன்ற பழிச்செயலை 320 ஆம் செய்யுளிலும் காட்டுவர். &mfl. 320 இவன் மலையமான் திருமுடிக்காரி என்பவன். பரணர் போன்ற பெரும் புலவர்களாற் பாராட்டப் பெற்றவன். இவன் ஓரியைக் கொன்று தேடிக்கொண்ட பழிபற்றிய செய்தியைக் கபிலர் இச் செய்யுளிற் காட்டுவர். இவனைச் சோழன் கொன்று தன் பழிதீர்த்துக் கொண்டான் என்பது பின்வரலாறு. கிள்ளி 380 சல்லியங்குமரனராற் போற்றப்படும் கிள்ளி ஒருவனே அம்பர்ப் பகுதிக்கண் இருந்தவகை நற்றிணை 141ஆம் செய்யுள், காட்டும். இவன் வெண்ணிப்பகுதியில் இருந்த்வ்ன் என்று இச் செய்யுளில் ஒளவையார் கூறுவர். இவ்வூர் தஞ்சை மாவட்டத்துக் கோயில் வெண்ணி யாக இருக்கலாம் என்பார் கள். இவனுர் நீர்வளம் மிகுந்தது என்பது இச் செய்யுள் காட்டும் செய்தியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/462&oldid=774714" இலிருந்து மீள்விக்கப்பட்டது