பக்கம்:நற்றிணை-2.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 நற்றிணை தெளிவுரை சென்னி 265 "ஆர மார்பின் சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன, நம்கண் நயவர நோக்கலின் என்று, சென்னியின் வள்ளன்மையைப் பரணர் இச் செய்யுளிற் கூறுகின்றனர். இவன் பரணர் காலத் திலிருந்த சோழ மன்னன் ஆகலாம். சோழர் 281, 379, 400 சோழருடைய கழாஅர் முன்துறையிலே காக்கைக்குப் பலிச்சோறிட்டுப் போற்றும் சிறப்பை 281 ஆம் செய்யுளில் கழார்க்கீரன் எயிற்றியார் கூறுகின்றனர். தேர்வண் சோழரின் குடந்தைவாயில் மாரியம் கிடங்கிற் பூத்த நீலம் பற்றி 379 ஆம் செய்யுளில் குடவாயிற் கீரத்தனர் கூறுவர். மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் கெட அறியாத நிலைய்ை ஆலங்குடி வங்களுர் 400 ஆம் செய்யுளில் காட்டுவர். தழும்பன் 300 இவன் ஊணுரின் தலைவன். இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும் புண் ஏ எர் தழும்பன்' என்று இவன் வள்ளன்மையைப் பாடியவர் பரணர் ஆவர். திருமாவுண்ணி 216 மதுரை மருத ன் இளநாகனர் திருமாவுண்ணியின் வரலாற்றை இச்செய்யுளிற் கூறுகின்றனர். 'எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும், குருகார் கழனியின் இதணத்து ஆங்கண், ஏதிலாளனின் கவலை கவற்ற, ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி' எனபா அவா. நன்னன் 270, 391 நன்னன் எனப் பெயருடையார் மூவர். கடம்பின் பெருவாயில் நன்னன், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன். நன்னன் உதியன் என்போர் அவராவர். இவர்களுள், வேந்தர் ஒட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முயற்சியின் கொடிதே' என்று பரணர், இவன் பிண்டன் முதலியோரைக் களத்தில் வென்றதுடன் சினம் தணியாமல், அவர்தம் உரிமை மகளிரின் கூந்தல்களைக் களைந்து கயிறு திரித்து கொண்ட பழிச்செயலைச் செய்தவன் என்னும் செய்தியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/464&oldid=774718" இலிருந்து மீள்விக்கப்பட்டது