பக்கம்:நற்றிணை-2.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடப்பெற்ற தலைவர்கள் - 461 கூறுவர். இவன் பாரம் பாழி மலைகட்கு உரியவனை நன்னன் ஆவன். இவனையே பெண்கொலை புரிந்த் நன்னன் என் மற்ருெரு. நிகழ்ச்சியாற் புலவர்கள் பழிப்பர். கொண்கான நாட்டு நன்னனின் ஏழிற்குன்றத்துச் சிறப்பை 391 ஆம் செய்யுளில் 'பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு ஏழிற் குன்றம்' என வியப்பர் பாலைபாடிய பெருங்கடுங்கோ. கெர்ண்கான நாடு என்பது இந்நாளிற் கொங்கணி பேசும் மக்கள் வாழும் இடம். பசும்பூட் சோழர் 227 ஆர்க்காட்டு நகருக்கு உரியவர் பசும்பூட் சோழர் என்று இச் செய்யுளில் தேவனர் கூறுகின்றனர்._ஆர்க்காடு அழசிக்கு உரியது என்றும் பிறர் கூறுவதனால், அழிசி சோழர்க்கு உட்பட்டு வாழ்ந்த குறுநிலத் தலைவன் என்று கருதலாம். ஆனல், ஆர்க்காடு பழந்தமிழகத்தில் தொண்டைநாட்டுப் பகுதியாக இருந்தது. எனவே, ச்ோழர் தொண்டைமண்டிலத்தை வெற்றி கொண்டு ஆர்க்காட்டைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தியும் இருக்கலாம். - பசும்பூண் வழுதி 358 இவன் மருங்கைப் பட்டினத்துக்கு உரியவகைக் கூறப் படுகின்றனன். 'பசும்பூண் வழுதி மருங்கை என்பர் நக்கீரர். எனவே நக்கீரர் காலத்துப் பசும்பூண் பாண்டியனே இவளுக லாம். மருங்கை என்பது, இந்நாளிலே மருங்கூர், மலுங்கூர் என வழங்கும் நாஞ்சில் நாட்டு ஊராகலாம். பொறையன் 346 இவன் கொல்லிக்கு உரியவகைக் கூறப்படுகின்றனன். எயின்ந்தை மகன் இளங்கீரனர் பொறையன் பெருந்தண். கொல்லி என்கின்ருர். இவன் இரும்பொறைச் சேரமரபின கைலாம்: அல்லது ஒரியும் அந்த மரபினன் என்றும் கொள்ள லாம். மிDலி 265 இவன் பாரத்துத் தலைவன் என்று இச் செய்யுளில் பரணரால் கூறப்பெறுகின்றனன். ஆகவே, இவன் நன்னனுக்கு முன்னர் இருந்தவனுகலாம். புள்ளிற்கு ஏமமாகிய அதிகனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/465&oldid=774720" இலிருந்து மீள்விக்கப்பட்டது