பக்கம்:நற்றிணை-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நற்றிணை தெளிவுரை இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்டொறும் பொலியும் கதழ்வாய் வேழம் இருங்கேழ் வயப்புலி வெரீஇ, அயலது கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் 5 கனிபெரிது இனியன் ஆயினும், துனிபடர்ந்து ஊடல் உறுவேன், தோழி! நீடு புலம்புசேண் அகல நீக்கிப் புலவி உணர்த்தல் வண்மை யானே! தெளிவுரை : தோழி! புகழ் மிகுதிப் படும்படியாக வாழ்கின்றவருடைய செல்வமானது நா ளு க் கு நாள் சிறந்து விளங்கும். அதுபோலக் காணுந்தோறும் சிறந்து விளங்குகின்றதாயிருந்தது விரைந்த செலவினையுடைய வேழம் ஒன்று. அதுதான் கரு நிறத்தை உடையதும் வலிமை கொண்டதுமான புலிைையக் கண்டு அஞ்சி, அவ்விடத்தைவிட்டு நீங்கிச் சென்றது. அது காலை அயலி டத்தே உள்ளதாகிய கரிய அடிமரத்தையுடைய வேங்கை மரமானது எதிரிட, அதுதான் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தன் பெருஞ்சினத்தைத் தணித்துக் கொண்டது. இத்தகைய குன்றுகளுக்குரிய நாடன் நம் தலைவன். அவன் நமக்கு மிகப் பெரிதும் இனியவனே !! ஆயினும், அவனேடு ஊடுதற்கு உரியவற்றையே மேற்கொண்டு அவன்பால் ஊடலைச் செய்வேன். நீளவும் நின்று நம்மை வருத்தும் தனிமைத் துயரமானது, சேய்மைக் கண்ணே அகன்று போமாறு செய்து, என் ஊடலைத் தெளிவிக்கக் கருதிச் சொல்லாலும் செயலாலும் என்பால் அன்புகாட்டும் வண்மையைச் செய்யும் அன்புடையவன் அவன் என்பதனைக் காண்பாயாக! சொற்பொருள் : பொலியும். சிறந்து வி ள ங் கும். "கதழ்வாய் வேழம் கதழ்வரல் வேழம் என்பதும் பாடம். கதழ்வு- விரைவு. கேழ்-நிறம். வயம்- வலிமை. மறலி. மோதிச் சிதைத்து. துணி-வருத்தம். புலவி-வருத்தம். புலவி-ஊடல். விளக்கம் : கொடையால் புகழ்பெற்ருேனின் செல்வ மானது பலருக்கும் பயன்பட்டு வறுமை தீர்த்தலால் சிறந்து தோன்றுவதாயிற்று; அவ்வாறே விரைந்த செலவினதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/52&oldid=774740" இலிருந்து மீள்விக்கப்பட்டது