பக்கம்:நற்றிணை-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 51 ރ நெருங்கியிருப்பது பெருங்கடல். அதனிடத்தே சென்று பெரிய பெரிய மீன்களை வேட்டையாடிக் கொள்ளும் தொழிலினர் நம் சிறுகுடிப் பரதவர்கள். அவர்கள் கடலின்ட மீண்டு வருவார்க்கு அடையாளமாக இரவுப்பொழுதிலே ஏற்றி வைத்துள்ள மிக்க கதிர்களையுடைய ஒள்ளிய விளக்குகள் தானும், முதிராத இளஞாயிற்றினிது எதிராகத் தோன்றுவதோர் ஒளியைப் போல்த் தோன்ரு நிற்கும். இத்தகு கானற் சோலையையும் கடற்றுறையும் உடை யோனகிய நம் தலைவன், தானே தமியனுக வந்து என்னை முன்னர்க் கூடினேன் ஆதலினலே, இனியும் அவனுகவே மீளவும் வருவான் எனும் நம்பிக்கையுடையேன். அதனல் அவன்பால் சினங்கொள்ளேன்! - t . சொற்பொருள் : பழநலம்’ என்றது, அவனைக் கூடுதற்கு முன்பாக விளங்கிய கன்னிமைக்காலத்தின் அழகுநலத்தை. பசலை.தேமலாகிய படர் நோய், பெரும்பிறிது-சாக்காடு. அலவன்-ளுெண்டு. புலவு-புலால் நாற்றம், கனைகதிர். மிக்க கதிர்கள். முதிரா ஞாயிறு. -இளஞாயிறு. எதிரொளி. எதிரான ஒளி; அன்றிக் கானற் சோலையிலே அதனல் உண்டாகும் எதிரொளியும் ஆம். 'கானலம் பெருந்துறை'. அழகிய கானற் சோலைகளையுடைய பெரிதான கட்ற்றுறை. விளக்கம் : இதனலே, தலைவிக்குத் தலைவனிடத்தே யுள்ள தளராத நம்பிக்கை தெளிவாகும். அவனது அன்பின் செறிவைக் களவிற்கூடி அநுபவித்துக் கண்டவளாதலின், 'அவன் தன்னை மறந்தான்; அதேைலயே காலம்நீட்டித்தான்' என்று குறைகாணும் தலைவியின் சொற்களை இப்படி மறுத்துக் கூறுகின்றனள். தன் மனையறத்துக்கு வேண்டிய பொருளைத் தானே முயன்று தேடிவந்த பின்னரே, தன் காதலியை மணந்துகூடி இல்லறம் நாடத்தல் பண்டைத் தமிழ் மரபு. பெற்ருேர் செல்வத்து இன்பநலம் துய்த்தலை எவரும் விரும்பார். ஆகவே, அம் முயற்சிகளுக்குத் தலைவன் பிரிதலைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் தலைவியரின் கோட்பாடு ஆகியிருந்தது. கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்' (நற். 110) ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே' எனப் போதனர் காட்டும் பண்பே தமிழ் மகளிர் பண்டைப் பெரும் பண்பு ஆகும். இறைச்சிப் பொருள் : பரதவர் கங்குல் மாட்டிய விளக்கு களின் ஒளியானது இளங்கதிரின் செவ்வொளிபோல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/55&oldid=774743" இலிருந்து மீள்விக்கப்பட்டது