பக்கம்:நற்றிணை-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின தெளிவுரை 55 மாறு, நாட்காலையிலே, நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும், பூப்போன்ற கண்களையும் உடைய்ோகிைய எம் புதல்வன் தூங்கும் இடத்தருகே சென்று, அவனருகே குனிந்து, எந்தாய் வருவாயாக’ என்று அழைத்தபடியே அவனைத் துயிலெழச் செய்வாள். அந்த இனிதான பேச்சை நாமும் கேட்டு மகிழவேண்டும். ஆதலிகுலே, நீலமணியைக் கண்டாற்போல்க் கருநிறத்தோடு தோன்றும் கருங்காக்கணங் கொடியின் பூக்கள், ஒள்ளிய பூக்களைக் கொண்ட தோன்றியோடும் கலந்து தண்ணிய புதல்தோறும் அழகு செய்தபடி இருக்கின்றன. பொற் காசினைத் தொடராகக் கோத்துவைத்தாற்போல விளங்கும் நல்ல மலர்களைக் கொண்ட சரக்கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள், அதன் கிளைதோறும் தொங்கியபடி இருக் கின்றன. இவற்ருலே புதியதொரு மணத்தினைப் பரப்பிற்ை போலப் பொலிவோடு விளங்குகின்றது, சிவந்த தரையை யுடையதான இம் முல்லை நிலம். நீராலே அழகு பெற்றிருக் கும் இதன் பெருவழியின் நெடிதான இடமெங்கணும் கவடு பிளக்குமாறு, நின் செய்வினைத் திறனைக்கொண்ட நெடிய தேரானது விரையச் செல்லுவதாகுக! சொற்பொருள் : மாநிறம்-கருநிறம். கருவிளை-கருங் காக்கணம். ஒண்பூ-ஒளிசுடரும் புதுப்பூக்கள். புதல்.புதர்; சிறுதுாறு. 'பொன்’ என்றது. ப்ொற்காசுகளே. தூங்க. தொங்க. வம்பு-புதுமணம். நீரணிப் பெருவழி-நீரால் அழகு பெற்றுள்ள பெரிய வழி; நீரால் அழகுபெற்றது கார்ப் பெயலால். செய்வினை நெடுந்தேர்-செயல்படும் வினையை முடித்து வரும் வரைக்கும் ஊறின்றிச் செலுத்துதற்கு ஏற்புடையதாகப் பண்ணப்பட்ட நெடியதேர். குறுமகள். இளையோள். நடை நாள் செய்த' என்பதற்கு, நடத்தலை அன்றுதானே தொடங்கிய எனினும் ஆம். நவிலா. தரையிற் பொருந்தாத நடை பயன்றறியாத தன்மை. ஒல்கல்-இடைநுடங்க அசைந்து நிற்றல். விளக்கம் : புதல்வன் இதுகாறும் நடைபயிலத் தொடங்கியிருப்பான் என்று எண்ணமிடும் தலைவன், அந்த இனிய காட்சியின் நினைவிலே திளைக்கின்றன். அவன் அயர்ந்து உறங்கியிருப்ப, அவனருகே சென்று குனிந்தபடி, பாசத்தின் பெருக்கோடு அவனை எழுப்பவாளாய், எந்தாய் வந்தீக என அழைக்கின்ற தலைவியின் தாய்மைச் செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/59&oldid=774747" இலிருந்து மீள்விக்கப்பட்டது