பக்கம்:நற்றிணை-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!. ٤٩رهب みmgoe Lannり 2 : &\ : - - - - 54 Sto நற்றிணை தெளிவுரை கேட்ட தோழி, தலைவியின் முன்னுறவை உணர்ந்தாளாய்த் தன் நட்புரிமை தோன்ற அவனுக்கு உதவ முற்பட்டு அவளே அவளுேடு கூட்டுவிப்பள் என்பதாம்.'முகம்’ என்பது, தான் புகுதற்கு இடமாகிய நோக்கு; புகுதல்.அந் நோக்கிற்கு எதிரே தான் சென்று புகுதல். மெய்ப்பாடு, பிறன்கட் டோன்றிய இளிவரல்; பயன்-தலைமகளை முகம் புகுவித்தல், 221. செல்க கின் தேர்! பாடியவர் : இளவேட்டனர். திணை : முல்லை. துறை : வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகன் பாகற்குச் சொல் லியது. - ((து-வி.) வினைமுடித்து மீள்வாளுகிய தலைமகனின் உள்ளத்திலே அதுவரை ஒடுங்கிநின்ற இன்பவேட்கை மேலோங்குகின்றது. விரையச் சென்று தலைவியைக் காணற்கு விரும்புகிறவன், "தேரை விரையச் செலுத்துமாறு பாகனிடம் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.) மணிகண் டன்ன மாகிறக் கருவிளை ஒண்பூங் தோன்றியொடு தண்புதல் அணியப் பொன்தொடர்ந் தன்ன தகைய கன்மலர்க் கொன்றை ஒள்ளினர் கோடுதொறும் தூங்க வம்புவிரித் தன்ன செம்புலப் புறவின் 5 ரேணிப் பெருவழி நீளிடைப் போழச் செல்க-பாக-கின் செய்வினை நெடுந்தேர் விருந்து விருப்புறுஉம் பெருந்தோட் குறுமகள் மின்ைெளிர் அவிரிழை கன்னகர் விளங்க நடைநாட் செய்த நவிலாச் சீறடிப் 80 பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி - 'வந்தீக, எந்தை' என்னும் அந்தீம் கிளவி கேட்க நாமே! தெளிவுரை : பாகனே! வருகின்ற விருந்தினை எதிரேற்று உபசரிக்க விருப்பங் கொண்டவள், பெருத்த தோள்களைக் கொண்டாளாகிய இளமை கொண்டவள், மின்னலைப்போல ஒளிசிதறும் விளங்கிய அணிகளைப் பூண்டவள், என் தலைவி, அவள்தான், எம் நல்ல மாளிகையானது விளக்கங்கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/60&oldid=774749" இலிருந்து மீள்விக்கப்பட்டது