பக்கம்:நற்றிணை-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 57 தெளிவுரை: தோழி! பலாமரங்களுடனே மலைவாழையும் உயரம்ாக வளர்ந்து செறிந்துள்ளதும், உயரமிக வளர்ந்த சுரபுன்னை மரங்களும் உடையதுமான பக்கமலைச் சாரலிலே துயிலுகின்ற, பிடியானையின் பக்கத்திலே மேகங் கவிந்து அதை மறைத்தது. அதல்ை, அதனைக் காணுதுபோன அதன் பெருங்களிருனது, அதனை அழைத்ததாகப் பிளிருநிற்கும். இத்தகைய சோலைகளைக் கொண்ட்தான, நின் தலைவருக்கு உரியதும், தொலைவிடத்தே இருப்பதுமாகிய நெடிய குன்றத்தினை நீயும் காணும் பொருட்டாக- - கரிய அடியையுடைய வேங்கையது சி வந் த பூக்களோடுங் கூடியதான வளைந்த கிளையினிடத்தே வடுக் கொள்ளுமாறு பிணித்திருக்கின்ற,முறுக்கேறிய புரிகளோடுங் கூடிய கயிற்றினைச் சார்ந்ததும், கைவினைத் திறேைல புனையப்பெற்ற சிறிய முடக்கத்தை உடையதுமான ஊசல்ை இழுத்து, மெல்ல நின்னே அதன்பால் ஏற்றிவைத்து, நீதான் விசும்பிடத்தே ஆடிப் பறக்கின்ற அழகான மயிலைப் போல எழிலுடன் தோன்றுமாறு, யானும், இன்று, நின் அல்கு லிடத்தே கிடக்கின்ற பசும்பொன் மணிகள் கோத்துள்ள மேகலையைப் பற்றினேனய், மேலே செல்ல உயர்த்தி, உடனே பின்னே செல்லுமாறும் விடலாமோ? இதனைச் சொல்வாய் காண்! - * , சொற்பொருள் : செவ்வி-சிவந்த மலர். வாங்கு சினை. தரைப்பக்கமாக வளைந்து தாழ்ந்துள்ள கிளை. விடுபுரி முரற்சிபுரிகள் முறுக்குற்று ஆழைந்த கயிறு. கைபுனை சிறுநெறி' என்றது, அக் கயிற்றிட்த்தே அமர்ந்து ஆடுதற்கு ஏற்றபடியர்கக் கையால் அழகிதாகப் புனையப்பெற்ற சிறிய வளைவான பகுதி. பசுங்காழ்-பசிய மணிகள்; இதன்ை மேகலை என்னும் அணியாகக் கொள்க. ஊக்கி-ம்ேலே உயரத் தூக்கி. பலவுடன்-பலாமரங்களுடன். 'பலவுடன் வாழை ஓங்கிய என்பதற்குப் பலவாகச் செறிந்துள்ள வாழைகள் உயரமாக வளர்ந்துள்ள என்றும் உரைப்பர். விளக்கம் : அவர்களது சிறுகுடியின்கண், அவர்களது இல்லின் அணித்தாகவுள்ள சோலையிடத்தே இருந்து அவள் இவ்வாறு சொல்லுகின்ருள் எனக் கொள்க. 'அவனைத்தான் யாம் வரக் காண்கிலேம். இற்செறிப்புற்ற யாம் இனிமேல் அவனேக் கூடித் துயர்தெளிதல் என்பது அரிதாகலின், அவன் குன்றத்தைக் கண்டேனும் தேறியிருப்பேம்' என்பது இது. இதனைக் கேட்டலுறும் தலைவன், இனிக் களவுறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/61&oldid=774750" இலிருந்து மீள்விக்கப்பட்டது