பக்கம்:நற்றிணை-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ めク)りNク ké கற்றிணை தெளிவுரை 56 ႕ျ၈ိV க தளிவுரை அவன் மனத்திரையிலே எழுந்து நிறைகின்றது. அதனைப் பாகனிடம் உரைத்துத் தேரை விரையச் செலுத்துமாறு கூறுகின் முன் தலைவன். - அதுகாறும் கோடையாலே வெதும்பிக் கிடந்த செம் புலப்புறவு, கார்காலத்து வருகையாலே பொலிவு பெற்றும், புதர்கள் தோறும் தோன்றிப் பூக்களும் கருவிளையின் பூக்களும் அழகு செய்யவும், கோடுதோறும் கொன்றைச் சரங்கள் தூங்கவுமாக விளங்கிய செவ்வியைக் கூறினன். அவ்வாறே, பிரிவுத் துயராலே அதுகாறும் வாட்டமுற்றிருந் தாளான தலைவியும், இனிப் புதுப் பொலிவு பெறுவாள் என்னும் உட்கருத்தும் தோன்றுதல் கண்டு இன்புறுக. மெய்ப்பாடு, உவகை; பயன்-பாகன் தேரினை விரைவாகச் செலுத்துதல். 222. ஊக்கிச் செலவுடன் விடுகோ! பாடியவர் : கபிலர். திணை : குறிஞ்சி. துறை : தோழி தலைமகன் வரவு உண்ர்ந்து, சிறைப்புறம்ாகச் செறிப் பறிவுறீஇ வரைவு கடாயது. - ((து. வி.) தலைவனின் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணங்கொள்ளுதலிலே செலுத்த விரும்புகின்ருள் தோழி. தலைவியிடம் கூறுவாள்போலத், தலைவனும், ஒருசார் நிற்பவன் கேட்டுத் தெளியுமாறு, தலைவின்யப் ப்ெற்ருேர் இற்செறித்தல் நேரும் என்று குறிப்பாகக் கூறுகின்ருள்.) கருங்கால் வேங்கைச் செவ்வி வாங்குசினை வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் கைபுனை சிறுநெறி வாங்கிப் பையென விசும்பாடு ஆய்மயில் கடுப்ப, யான் இன்று பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச் 5 செலவுடன் விடுகோ, தோழி-பலவுடன் - வாழை ஓங்கிய வழையமை சிலம்பில் துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காளுது. பெருங்களிறு பிளிறுஞ் சோலையவர் சேனெடுங் குன்றங் காணிய ேேய! 10 \ \

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/62&oldid=774751" இலிருந்து மீள்விக்கப்பட்டது