பக்கம்:நற்றிணை-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றி ைதெளிவுரை - 6; ಟ್ವಿ!!! என்று கூறுவனபோல, மாமரத்தின் பூங் காத்துக்களைத் தாங்கியுள்ள கொம்புகளிலே இருந்தபடி, சிவந்த கண்களையுடையவான கருங்குயில்கள் எதிர்எ ஒன்ருேடொன்று மாற்றி மாற்றிக் கூவியபடியே இருக் கின்றன; இத்தகு இன்பந்தரும் இளவேனிலும் வந்தது; ஆதலினலே நம்மிடத்தேயிருந்தும் பிரியமாட்டோம் என்று நம்மைத் தெளிவித்தோரும் அவர். இப்போதோ, - பயன் அற்றுப் போனதாய்ச் செவ்வியழிந்து காய்ந்து கிடக்கின்ற பல் பெரிய நெடிய வழியிடத்தே, வில்லேந்திய ஆறலை கள்வர்கள் மொய்த்துச் செவ்வி நோக்கியிருக்கும்படி யான கவர்த்த வழிகள் குறுக்கிட்டுக் கிடக்கும் வெண்மை கொண்ட ப்கைவ ரூர்களையும், கடத்தற்கரியதான சுரத் தினையும் கடத்துபோகக் கருதியவரான அவருக்கு, யான் இனி யாது சொல்ல மாட்டுவேனே? - சொற்பொருள் : பெரியர் . பெரிதும் பண்புடையவர். கொழுந்து-துளிர்கள். அரும்பு-பூவரும்பு. இணர்-பூங் கொத்து. இருங்குயில்-கருங்குயில். எதிர்குரல் பயிற்றல்ஒன்று மாற்றி மற்ருென்ருகத் தொடர்ந்து கூவுதல். தெளித்தோர்.தெளிவு கொள்ளச் செய்தோர். தெளித் தோர் தேஎத்து-தெளித்தோரிடத்து. பயன்-பசுமையும் வளனுமாகிய பயன்; ‘கயன்’ எனவும் பாடம்; கயன்-குளம். கண்ணழிதல்-இடத்தின் செவ்வி கெட்டுப் போதல். கவலைகவர்த்த வழிகள். விலங்கிய-குறுக்கிட்ட. 'வெம்முனை" என்றது முனையிடத்துள்ள வெம்மைமிக்க பகைவர் ஊர்களே. விளக்கம் : அன்பற்ருரும் பண்பற்ருரும் பிரியக் கருதினால் யாமும் பொறுத்திருப்போம். அன்புடையரும், பெரியரும், 'காலமல்லாக் காலத்தே பிரிவேனே எனக் கவலைகொண்ட என்னை முன்பு தெளிவித்தோருமாகிய அவரே பிரிந்து போயினரே! இனி அவரைப்பற்றி யாது கூறுவது காண்? இன்பத்தை விட்டுக் கொடிய வெம்மையான நெறியையே நாடியதல்ை, அவர் மனமும் அவ்வாறு கொடியதாயிற்றுப் போலும் என்று நினைத்து வருந்து கின்ருள். - அன்பர்! பெரியர்! என்றது, அன்பும் மறந்தார், சொற் பிழைத்துப் பெருமையும் மறந்தார் என்று அசதியாடிச் சொல்லியதாம். இதல்ை, தலைவி அயா வுயிர்த்து ஆற்றி யிருப்பாள் என்பதும் உணரப்படும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/65&oldid=774754" இலிருந்து மீள்விக்கப்பட்டது