பக்கம்:நற்றிணை-2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

له امامه 60 .ށ * * s நற்றிணை தெளிவுரை —t—v - இறைச்சி: சுருமீன் இருக்கின்ற கடலினது துறையிடத்தே துஞ்சாத கண்ணை உடையவரான மாதரை இவ்வூர் உடையது என்றது, தலைவியிருக்கின்ற மனையிடத்தே துஞ்சாக் கண்ணினளாகக் காவலிருக்கும் அன்னையையும், புறத்தே வலியுடையராய்க் காத்திருக்கும் ஐயன்மாரையும் கொண்டிருக்கின்ருேம் என்று உணர்த்தியதாம். 224. இன்ப வேனிலும் வந்தது! பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ, திணை: பாலை. துறை : தோழியாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள், பெயர்த்துஞ் சொற்கடாவப்பட்டு, 'அறிவிலாதேம் என்னை சொல்லியும் பிரியாராகாரோ?' என்று சொல்லியது. ((து-வி.) தலைவன் பிரிவைத் தோழி தலைவிபாற் சென்று கூறுகின்ருள். அவன் பிரிந்தது அறிந்த பின்னரும், அவன் பிரிவைத் தாங்கமாட்டாளாய்த் துயரங்கொள்ளும் தலைவி, தோழியிடத்தே கூறி நொந்து கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது.) • அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலைப் பின்பணி அமையம் வருமென முன்பனிக் கொழுந்து முந்துlஇக் குரவரும் பினவே புணர்ந்தீர் புணர்மி ைேவென இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் 5 இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின் பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து இனியெவன் மொழிகோ யானே-பயனறக் கண்ணழிந்து உலறிய பன்மா நெடுநெறி வினைமூசு கவலை விலங்கிய - 10 வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே ? தெளிவுரை: தோழி! நம் தலைவர்தானும் நம்மிடத்தே அன்புடையவர், மிகவும் பெரியவர்! அதன் மேலும், பின் பனிக் காலமானது அடுத்துவரும் என்பது குறித்ததாய், முன்பனிக் காலத்தே தளிர்களே முற்படற் தோற்றுவித்தபடி அரும்புகளைக் குராமரங்களும் கொள்ளா நின்றன. "தலை வனும் தலைவியுமாகி ஒன்று கூடினர் பிரியாதே கூடியிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/66&oldid=774755" இலிருந்து மீள்விக்கப்பட்டது