பக்கம்:நற்றிணை-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ുന' * * }ు 4 qa 不下 .* போவதே கடன் என்பதும், அதனை மறுத்தல் பெண்களுக் கும் மரபாகாது என்பதும், அவன் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதும் தோன்றச் செல்மின்', 'சென்று வினை முடிமின்’ என்கின்றனள். முயங்கி உழையீராகவும் பனிப்போள்" என்று தலைவியைக் கூறியது, அவள் பிரியின் உயிரினையும் தரித்திருப்பாளோ என்க் கலங்கியதாம். அதனை அவனும் நினைவிற் கொண்டு வினைமுடித்ததும் விரைய மீளவேண்டும் என்றதும் ஆம். 'வாடையும் கண்டீரோ என்றது, அது உடனுறைந்து இன் புறுத்தற்கு உரிய காலம் என்பதை நினைவுபடுத்தி, அக் காலத்துப் பிரிவை ஆற்றியிருப்பதற்கு இயலாளாய்த் தலைவி கொள்ளும் நடுக்கத்தை உணர்த்தியதாம். செலவழுங்குவித்தல் என்னும் துறைக்கு ஏற்பப் பொருள் கொள்ளுவதாயின், பிரிவைக் கல்வியிற் பிரிவாக வும், இதனைக் கேட்டலுறும் தலைவன், அதனை அப்போதைக்கு நிறுத்துவன் என்தும் கொள்க. 234. காணுங்கால் இனிது பாடியவர்: ஆலங்குடி வங்கனர். திணை: மருதம், துறை: தோழி வாயில் மறுத்தது.

-வி.) பரத்தையிற். பிரிந்து வீட்டிற்கு வருகின் விே - `ಜ್ಜಿನ್ಹಿ। சமாதானப் படுத்துமாறு தோழியை வேண்டுகின்ருன். அவள், அவனுக்கு இசையமறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

வயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக் கயக்கணக் கொக்கின் கூம்புமுகையன்ன கணக்கால் ஆம்பல் அமிழ்துகாறு தண்போது குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்செட விரியும் கயற்கணங் கலித்த பொய்கை ஊர! 5 முனிவில் பரத்தையை என்துறந் தருளாய் கணிபுலம்பு அகிலத்த வேலை நீங்கப் \ புதுவறங் கூர்ந்த செறுவில் தண்ணென மலிபுனல் பரத்தங் தாஅங்கு இனிதே தெய் நின் கானுங் காலே! 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/78&oldid=774768" இலிருந்து மீள்விக்கப்பட்டது