பக்கம்:நற்றிணை-2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின தெளிவுரை 85 தெளிவுரை : மடந்தையே! வியப்புடைய இரவலர் வரும்பொழுது, அவர்க்குக் கொடுத்தலைக் கருதினளுக, வள்ளல் ஆய் ஆண்டிரன் யானைத்திரள்களைச் சேர்த்து வைப் பான். அப்படி அவன் சேர்த்துவைத்த யானைத்திரள்களைப் போல, உலகத்து உயிர்கள் எல்லாம் உவப்படையுமாறு, சொல்லுதற்கரியவான பற்பல உருவங்களோடுங் கூடியவை யாக, மழை மேகங்கள் வானில் எழுந்து ஓங்கித் தோன்று வதன, அதோ காண்பாயாக! இஃது அவர்தாம் வருவதாகக் குறித்த பருவம் அல்லையோ! இதுகாறும் மிகப்பெரிதும் பசந்தனையாய்த் தோள்களும் மெலிந்துபோக, நீர் நிரம்பிய கண்களையும் கொண்டிருந்தன. இருப்பினும், 'இவை முன்னைப் போலன்றி இவ்வாறு வேறுபட்டுப் போகும்ாறு, நமக்கு இனிய உயிரைப் போன்றவரான நம் பிரிதற்கரிய காதலரும் நம்மைப் பிரிந்து சென்றவர், தாம் வருதற்குக் குறித்த காலத்தையும் நீடிக்கச் செய்தனரே!' என்று சொல் லப்படும் புலவியை உள்ளத்துக் கொண்டனையாய், அவர் வந்தவிடதது அவரிடத்து ஊடுகின்றதனையேனும் நீ செய்ய மாட்டாயோ? இஃது என்னே வியப்பு ! சொற்பொருள் : நனிமிக - மிகப் பெரிதும். சாஅய் = மெலிந்து. பனிமலி கண் . நீர் நிரம்பிய கண். பிரிவருங் காதலர் - பிரிதற்கு அருமை யுடையவரான காதலன்பை உடையவர். நீத்து - கைவிட்டு அகன்று. நீடினர் - வினை குறித்துச் சென்ற தேயத்தே காலத்தை நீட்டித்தனர்! புலவி - ஊடல். ஏர்தரல் - எழுதல்; அழகுதருதலும் ஆம்! விளக்கம் : வியத்தற்கரிய திறத்துடன் இசையும் கூத்தும் பாட்டும் நிகழ்த்தும் புலமையாளர் ஆதலின், வியப் புடை இரவலர் என்றனர். இனி, அவர்தாம் சிறிது பொருளே பெற்றுப் போதலைக் கருதினராகவும், ஆய் அண்டிரன் அவர்க்கு யானைகளையே பரிசிலாக அளிக்கும். செயலை நினைந்து வியந்தனர். எனினும் ஆம். அண்டிரனின் இத்தகைய கொடைச் சிறப்பினை வியந்து, வாய்வாள் அண்டிரன் பாடின கொல்லோ, களிறு மிகவுடைய இக் கவின்ப்ெறு காடே! என்று பாடுவர் சான்ருேர். வானத்தே எழுந்து மொய்த்த கருமுகில்களின் தோற்றத்தை இவ்வாறு களிற்றுக் கூட்டங்கட்கு ஒப்பிட்டு இன்புறுகின்றனர். உட் கொண்டு ஊடிற்றும் இலையே' என்றது, ஆற்றியிருப்பாரும் அவன் வந்த காலத்து ஊடுதல் இயல்பாக, நீதான் அது தானும் செய்திலை என வியந்து கூறியதாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/87&oldid=774778" இலிருந்து மீள்விக்கப்பட்டது