பக்கம்:நற்றிணை-2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின் தெளிவுரை 97 தேம்படு சிலம்பின் தெள்ளறல் தழீஇய துறுகல் அயல தூமணல் அடைகரை அலங்குசின பொதுளிய நறுவடி மாஅத்துப் பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில் கவறுபெயர்த் தன்ன கில்லா வாழ்க்கையிட்டு 5 அகறல் ஒம்புமின் அறிவுடை யீரெனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல மெய்யுற இருந்து மேவர நுவல இன்ன தாகிய காலப் பொருள்வயின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின் 10 அரிதுமன் றம் அறத்தினும் பொருளே! தெளிவுரை : தேன் உண்டாகின்ற பக்கமலை; அதனி டத்தே தெளிவான நீர் சூழ்ந்துள்ள ஒரு வட்டக் கற்பாறை; அந்தப் பாறைக்கு அயலதாகத் துாய மணல் பரந்து கிடக் கும் அடைகரை; அதனிடத்தே, அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துள்ள நறிய மாமரங்கள் மிகுந்த சோலை; அந்தச் சோலையின்கண்ணுள்ள மரங்களின் இலைச்செறிவு கொண்ட பகுதிகள் தோறும் அழகிய கண்களையுடைய கருங்குயில்கள் தங்கியிருக்கும். அவை, சூதாட்டக் காயானது உருண்டு போவது போன்றதான நிலையில்லாத வாழ்க்கை இது; இதனை முன்னிட்டுப் பொருளாசையாலே நும் துணையா வாரைப் பிரிந்த போகாதிருத்தலைப் பேணுவீராக; நீர்தாம் அறிவு உடையீர்!’ எனப் பிரிவுத் துயரத்தாலே செயலறும் படியாகக் கைவிட்டுப் போக நினைப்பார்க்குக் கடிந்து உரைத்து, அவர் போக்கை விலக்குவதுபோலக் கூவா நிற்கும். மெய்யொடு மெய்யானது பொருந்துமாறு தன் பெடை யுடன் கூடியிருந்தபடியாக, நம் உள்ளத்தேயும் விருப்ப முண்டாகக் கூவாநிற்கும். நமக்குத் துன்பந் தருவதாகிய இக் காலத்தினும் (இளவேனிற் காலத்தினும்) பொருள் குறித்துத் தம் மனைவியரைப் பிரிதல் ஆடவர்க்கு இயல். பென்று கூறப்படுமானல், அறத்தைக் காட்டிலும் பொருள். தான் பெரிதும் அருமையுடையது போலும்! هر சொற்பொருள் : தேம்படு சிலம்பு - தேன் கூடுகள் பல வற்றையுடைய பக்கமலை. தெள்ளறல் - தெளிந்த நீர். துறுகல் - வட்டக்கல், ஆலங்கு சின - அ ைச யும் ளை. பொதும்பு - இலைச் செறிவு, பூங்கண் - அழகிய கண், சிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/99&oldid=774791" இலிருந்து மீள்விக்கப்பட்டது