பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

அவன்: ஆம்! கண்டதும் காதல்! கடவுள் இயற்கைஅஃது. ஒத்த இருவர் ஒன்றாகியது உங்கள் உள்ளம் அறியும். அவள் மனத்தில் காதல் தளிர்ப்பதாலேயே என்மனத்தும் காதல் தழைக்கின்றது.

தோழி: இந்தக் கல்வி எல்லாம் ஏழை இளம் பெண்ணின் மூளையில் ஏறவில்லை. பொழுதாகிறது. விடிவதன் முன்னர்த் தைந்நீராடவேண்டும்.

அவன்: அவளுந்தானே!

தோழி: தோழிமார் எல்லாருந்தாம். நேரம் ஆய்விட்டது. இதோ, மாடு மேய்க்கும் ஊரிளஞ் சிறுவர்களும் உறக்கம்விட்டு எழுந்து வந்துவிட்டார்கள்; வீட்டு மன்றத்திலிருந்து, எங்கள் செல்வமாம் எருமைக் கறவலை ஓட்டிக்கொண்டு போகிறார்கள், சிறுவீடு மேய!

அவன்: கன்றைத் தொழுவத்திலேயே கட்டிவிட்டு! பாவம்! அம்மா அம்மா என்று கதறுகிறது கன்று! எருமையும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது; அத்தாயின் முகமெலாம் அன்பாக மலர்கிறது. அதனைக் காணும் கண், இந்த ஊருக்கு ஏது? அந்த எருமையை வற்புறுத்திப் பிரிப்பதோடு அதன்மேல் ஏறி வேறு போகின்றனர். பேரன்புடையாரைப் பிரிப்பதே பேரூரின் பெரும் பெருமை

தோழி: எருமையின்மேல் எமன் போலப் போவதே, எருமையூரில், எருமை மக்களின் ஏற்றம் என்று பாடுங்கள்! உங்கள் பல்லவி அது! பனி நிறைந்த புல்லைக் காலாற மேய்ந்தால், நன்றாகப் பால் கறக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? கன்றுக்கும் பால் இனியாதா!

அவன்: கன்றுக்கு என்றுதான் கனிவு! ஏடும் தயிரும், வெண்ணெயும் நெய்யும, கன்றுதான் உண்டு

98