பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தோழி: கன்றும் கறவையுமே காதலர் : சிறுவரே தோழிமார்; பிரிப்பதே காவல்; கன்று விடுவதே ஒருங்கு கூட்டல்; பாலே இன்பம்—கற்றுக்கொண்டேனா ? நான் நல்ல மாணவிதானே?

அவன்: கிளிபோலச் சொல்வதைச் சொல்லி என் பயன்? சிரிப்பாகத்தான் முடியும்! காதற் கருத்தைக் காணவேண்டும்.

தோழி: கண்ணா கருத்தைக் காணும்?

அவன்: நோன்பு நோற்க நோற்க அந்தக் கண் திறக்கும்.

தோழி: அப்படியானால் நோன்பு நோற்றுவருகிறேன். வழி விடுங்கள்.

அவன்: காயா, பழமா?

தோழி: "கிட்டாதாயின் வெட்டென மற" என்பது தெரியாதா? நீங்கள் சொன்னதுபோல நாங்கள் சிறுவர்கள். அவளோ எங்கள் குடியின் தலைப்பெண்; குறுமகள்; பச்சைக் குழந்தை: உங்கள் வேதாந்தமும் தெரியாள்; காதற் கதையும் அறியாள்.

அவன்: அவள் அறிவாள் என நீங்கள் அறியீரோ! இளையவள், என்றும் இளையவளாய் வாழ்க ! அன்பு பெருகப் பெருக வளர்ந் தணைத்த பெருந்தோள்கள்—பேரின்பம் பேரின்பம்!

தோழி: என்ன பழி! என்ன பழி! வாய் கூசாதோ!

கள்ளமறியாக் கன்னிப் பெண்! கன்னி நோன்பு நோற்கின்றாள்; எங்களோடு, தைந் நோன்புக்காகக் கதிரவன்

100