பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தோழி: உம்முடைய கள்ளப் பேச்சுத்தான் ஒன்றும் விளங்கவில்லை.

அவன்: கள்ளம் என்ன? கவடு என்ன? நாணத்தால் அவள் ஒன்றும் கூறுவதற்கு இல்லை.

தோழி: எங்களுக்கும் மறைவா?

அவன்: நீங்கள், அவளிருந்தால் உயிர் பெற்ற உடல்போல் தளிர்த்து, அவள் பிரிந்தால் உயிரிழந்த உடல்போல் வாடும் இயல்பினர் ! அவளே உங்கள் பொலிவு ! அவள் எதிர், உணர்ச்சி மிக்குப் புத்துயிர் பெறுகின்றீர்கள்! இழையணிந்து சிறப்பதுபோல, இலங்கிப் பொலிகின்றீர்கள். அவளே உயிராக, அவளே ஒளியாக, அவளே அணியாக ஒன்றுபட்டது உங்கள் ஆயமாம் தோழிமார் கூட்டம். இதனை நான் அறிந்திருக்க அவளறியாளா?

தோழி: அதனால் என்ன?

அவன்: உங்களோடு சேர்ந்தால் நீங்களாகவே ஆகிவிடுகின்றாள் ; நீங்கள் விரும்புவதனை விரும்புகிறாள்; நீங்கள் செய்வதனைச் செய்கிறாள். ஆதலின், நீங்கள் தைந் நீர் ஆடினால் அவளும் ஆடுகின்றாள். அஃது அவள் பெருமை! பரிவு! அன்பு! உலகம் முழுதும் விளையாட்டுக் குடும்பமாய் இன்ப அன்பறிவொளியை வளர்க்கவேண்டும். அந்த எதிர்காலச் சமுதாயத்தை இவ்வாறு படைக்கின்றாள்; தன்னைத் தானறப் பெறத் தவஞ் செய்கிறாள்; உங்கள் அன்புக் கூட்டத்தை அவள் வளர்த்துப் பழகுகிறாள்.

தோழி: புகழ்வதுபோலப் பழிக்கின்றீரா? நெஞ்சொன்று நினைப்பது; வாயொன்று பேசுவது; உட-

102