பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளே மருந்து

லொன்று செய்வது. என்ன காட்சி! என்ன உயர்வு! நெஞ்சில் நீர்; செயலில் நாங்கள்; வாயில் பாவைப் பாட்டு: எதிர்காலச் சமுதாயம் வாழும் வழி இதுதானே!

அவன்: தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராம் பெரியோர், தாம் அழிய மாறியும் பிறருக்கென வாழ்வர். "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்பது தெரியாதா?

தோழி: உயிரையும் விடுவர்; ஆனால் நீர் சொல்லும் நாணத்தைமட்டும் விடமாட்டார் போலும் !

அவன்: உயிரினும் சிறந்தது நாண். அதனைவிட்டுப் பேசினால் பிறர் மனம் நோகும்; மானம் கெடப் பேசுவதாய் முடியும். பேச்சுக் கெட்டாததனை எவ்வாறு பேசுவது? கடவுட் காதலைக் கதையாகச் சொன்னால், நாயின் கதையாகவே முடியும். பேசாப் பெரு மௌனமே நாணம்; அதுவே பெண்ணின் பெருமை. நாணமில்லாப் பெண், பெட்டை நாயும் பேழ்வாய்ப் பேயுமே! பெண்ணுக்குத் தக்கது, பேசாத பெரு நாணம். அவளும் நீங்களும் ஒன்றானால், அவள் உணர்வு உங்கள் உணர்வு ஆகாதா? நீங்கள் உய்த்துணர மாட்டீர்களா? பிறந்த குழந்தையின் பேச்சைக் கேட்டா, தாய் அதனை அறிகிறாள்? பேச்சா விளக்கும்? அஃது உண்மையில் உண்மையை மறைக்கும் திரை. பேசாத பெருமௌனம் பேசுவதுபோல் பேச வல்லார் யார்? பேசாத பெரு நாணின் பெரும் பேச்சைப் பெண்ணொடு பெண்ணாய், அன்பொடு அன்பாய், உயிரோடு உயிராய் இயைந்த நீங்கள் அறியவில்லையானால், யார் அறிவர்?

தோழி: (தனக்குள்) ஆனால், நாங்கள் மட்டும் நாணம் விட்டு, "வாருங்கள்; வந்து எங்கள் தலைவியைத் தழுவுங்கள்"

103