பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

என்று வேண்டவேண்டும். (வெளிப்படை) நாணினும் சிறந்தது கற்பன்றோ ? தைந் நீராடி வழிபடும் பாவைக் கடவுளையுமா பழம்பாட்டுப் பாடி ஏமாற்றுவாள்? எங்கள் தலைவியை நாங்கள் அறியோமா? அவ்வாறு வஞ்சனை செய்யாள்.

அவன்: யான் என்ன, இறைவியையும் "வஞ்சிக்கிறாள்" என்றா சொன்னேன்?

தோழி:

"நல்ல கணவனை நாளை நீ தாராயோ
எல்லாமுன் அன்பன்றோ அருளேலோ ரெம்பாவாய்"

என்று பாடுவாளா?

அவன்: உங்கள் பாட்டு வேறு; அவள் பாடுவது வேறு.

விரும்பிப்போத் தந்திவன் தழையுந்தா ருந்தந்தான்
வருவதெலாம் நின்னருளே வாழியேலோ ரெம்பாவாய்"

என்று பாடியே முழுகுகின்றாள்.

தோழி:

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

என்பதன்றோ கற்பு நெறி? கணவனை அறிந்தபின் கடவுளைத் தொழுவது கற்பு நெறியோ?

அவன்: கடவுளைத் தொழுவதும் கற்பு நெறியே. கணவனை விட்டுத் தனியே வேண்டுகோள் விடுத்துத் தொழுவதே வேண்டாதது. கணவனோடு கூடி வேண்டுவது, தவறன்று. இங்கே, வேண்டுகோள் இல்லை உள்ளது நன்றியறிவே; அதிலும், வியப்புடன் எழும் நன்றியறிவு.

தோழி: வியப் பொன்றோ !

104