பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

உயிர்த்தோழி இவள். இவள் வழிக்கு வந்தால் எல்லாம் எளிதாகும். என் உயிரே போய்விட்டதுபோலப் போய்விட்டாள் இவள். இனித் தலைவியே தஞ்சம். அவள் செய்த இந்தக் காதல் நோய்க்கு அவளேமருந்து; வேறு யார் அறிவர்? வேறு வழி இல்லை.

"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து"


"மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன்
இன்தீம் பால்பயன் கொண்மார் கன்றுவிட்டு
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன்என
இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது
மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே"

—நற்றிணை 80.

[கார் - கருமை; போத்தந்து-வந்து.]

106