பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவரூப நாடகம்

உள்ளடங்கித் தங்க நிழல் தரவில்லையா? ஒரு புல்நுனைப் பனிநீர்த் துளிபோன்ற கரு, யானையாகவும் திமிங்கிலமாகவும் பெருகவில்லையா? எங்கும் ஒரே சக்தி இவ்வாறு இயங்குகின்றது: மலையின் பெருமை திண்மை—வானத்தின் பரப்பு நிறைவு—நீரின் தன்மை நெகிழ்ச்சி—மின்னலின் விளக்கம் ஆற்றல்—அணுக்குண்டு வெளியிடும் பரமாணுவின் ஊழிக்கூத்து—இவை எல்லாம் அந்த அற்புதச் சக்தியின் பேராற்றற் பெருவெள்ளமே ஆம். பலநிறம் கொண்டு பலபல வடிவாய்ப் பலபல மணத்துடன் தேன்விருந்து ஊட்டும் மலர்களின் அழகே அழகு! செவ்வானத்தின் செவ்விய அழகு—மானின் மருண்ட பார்வையில் வெள்ளமிடும் அழகு—மயிலின் தோகையோடு விரியும் அழகு—பெண்ணின் ஐம்புல விருந்தாம் பேரழகு—இவை எல்லாம் அந்த அற்புதச்சத்தியின் அன்புவெள்ளம். அந்தச் சக்தியே தாய்மையாய் உலகினை வளர்க்கிறது. அம்மையப்பன் என இவ்வாறு ஆற்றலும் அன்புமாய் நிறைந்த பெரும்பொருளைப் போற்றலாகாதா?

இவ்வாறு உயிருள்ள பொருளிலும் உயிரில்லாப் பொருளிலும் ஒருங்கு நிறைந்து நீக்கமற நிறைகின்ற இந்த ஒற்றுமைக் காட்சியை என் என்பது? இதனையே விசுவரூப தரிசனம் என்பர் முன்னோர்; இதனை அருச்சுனன் கண்ணனிடம் கண்டான்; கொடிய சூரபன்மனும் போர்க்களத்தில் எதிர் நின்ற முருகனிடம் கண்டான். பெருந்தேவனார் என்ற பெரும் புலவரும் காண்கிறார் இந்த ஒற்றுமைக் காட்சியை. அவர் கண்ணாக இந்த நாடகத்தை நாமும் காண்போம்.

2

கடலையும் தாங்கி நிற்கும் கற்றரை, கண்ணுக்கும் தோன்றாது கடலடியில் பாதாளமே என்று சொல்லப்-

109