பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவரூப நாடகம்

சுருட்டிக் கட்டிக் கோலம் கொள்ளுவதும் ஒருமாய வித்தையே. அவன் உடுக்கும் உடுக்கை கடலே ஆம். நீரால் உலகினை அவன் வாழ்விக்கும் சிறப்பும் ஆற்றலும் இங்கே தோன்றவில்லையா? என்ன ஒளியான நீர் இது! கருங்கடல் நீர்! ஆனாலும், கையில் அள்ளினால் தெள்ளத் தெளிந்த நீர்—அற்புதம்! அற்புதம்! கடலருகே நிற்கும் நம்மீது கடவுள் நீரைத் தெளித்து நம் உள்ளமும் உயிரும் குளிர்ந்து தூய்மையாகும்படி தூவுகின்ற நீர் அன்றோ இஃது! இதோ இச்சிறு துளியில் சூரியனும் உலகமுமே நிழலிடுகின்றன. அழகே அழகு! மழையாய்த் தூவுகின்ற நீரும் இந்தக் கடல்நீரே அன்றோ?

அவனாம் அப்பெரும்பொருளின் இயக்கமும்கேட்டோம். உயிரிலாப் பொருள்கள் நின்ற நிலைக்கு மேலாக உயிருள்ள பொருள்கள் தோன்றி இயங்கி முழங்குகின்றன. அப்பெரும் பொருளின் ஆற்றலை முழங்குகின்றன. வளைசங்கு—நரல்கிறது; ஒலிக்கின்றது; ஈதன்றோ கடலின் பெருமை நமக்குக் கடல் தரும் பரிசில், அப்பேராற்றல் தரும் பரிசில், இப்பொருளுலக வாழ்க்கையே. முத்தும்சங்குமாய்ப் பொருளுலக வாழ்வு பொலிவுபெற்று அழகுபெற வில்லையா?

கடல் என நிற்பது வெறும் தண்ணீர் அன்று. இயக்கமே வடிவமானது அது. காற்றும் நீரும் கலங்கி வீசும் அலைகளால் ஒளிர்வது கடல். அந்த அலைவீசும் தூநீர் அன்றோ நம்மேல் படுகிறது! எனவே, காற்றும் அங்கே தோன்றுகிறது. இயக்கமே காற்று என்ற பூதத்தின் வடிவம்; உயிரிடையே தோன்றும் பஞ்சப் பிராணனும் இயக்க வடிவமே ஆம். இயங்குகின்ற உயிர்களும் இங்கே

111