பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவரூப நாடகம்

கின்றோம். பல பல உலகக் காட்சிகள். பல பல உயிர்களின் தோற்றம்—அவற்றின் பல பல இயக்கம்—அவற்றின் பல பல வரலாறு—உலக வரலாறு இவ்வாறு எல்லாம் எழுகின்றது. எங்கும் நிறைந்த பெரும்பொருளின் செயற்பாடே இவை அனைத்தும். ஆயிரம் கையுடையான் அன்றோ அவன்? அப்பெரும்பொருளாகும் அவனது கைத்திறமே இவை எல்லாம். எட்டுத் திசையும் எட்டுக்கையாக எண்டோள் வீசிநின்றாடும் கூத்து இது. திசை கையாகும் காட்சி! கருத்துக்கும் எட்டாக் காட்சி. விஞ்ஞானத் துறைகள் பலவும் கூறும் கருத்தின் ஒருமைக் காட்சி இது.

கற்றரை—கருங்கடல்—கருவானம்—என்று இவ்வாறே அடுக்கினால் இங்கு ஒளி வேண்டாவா? கண்ணாகி நின்று காட்டி, உள்நின்று காண்பவனும் அவனே—அப்பெரும்பொருளே. பெருந்தீச்சுடராம் சூரியன் உலகுக்கு எல்லாம் பெருவிளக்கு. பைங்கதிர் மதியம் முதலானவை அந்த விளக்கின் எதிர் ஒளிகள். இவை இரண்டாலும் உலகம் ஒளிபெற்றுக் கண்பெற்றுக் காண்கிறது. பெரும்பொருளாம் அவனும் அவையாய் எல்லாவற்றையும் காண்கிறான். பைங்கதிர் மதியமும் சுடரும் அவன் கண்கள். காண்கிறவன் அவன்; நாமும் காண்கிறோம் என்கிறோம்—நம் கண்ணாக நின்று அவன் காட்டிக் காண்கிற நுட்பம் என்னே என்னே?

3

இயக்கம் என்றோம்; முன்பின் என்றோம். இங்குதான் காலம் என்ற கருத்தும் பிறக்கிறது. வரலாறு பிறக்கிறது. காலமும் இடமும் கலந்த மயக்கமே உலகம். கண்ணாய் நிற்கும் சுடரும் திங்களும் காலத்தைக் காட்டும்

113

8