பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

உலகப் பெருங்கடிகாரங்கள். எனவே, காலமாய் அமைந்து, காலத்தையும் கடந்து அப்பெரும் பொருள் களிநடம் புரிகிறது—அவன் புரிகிறான்; இவ்வாறு இடமும் காலமுமாக எல்லாம் இதனுள்ளே—இவனுள்ளே விரிகின்றன. இயன்று வரும் படைப்பும் காப்பும் வரலாறும் இவ்வாறு முக்காலக் காட்சியாக விளங்க இப்பெரும்பொருள் ஒளிர்கின்றது—இவன் ஒளிர்கிறான். எல்லாப்பொருளும் எல்லாக் காலமும் எல்லாக் காலநிகழ்ச்சியும் ஒருங்கே தோன்றுகின்ற அற்புதக் காட்சியாக இப்பெரும் பொருள்—இவன்—தோன்றுகின்ற வியப்பே வியப்பு! இயன்றுவரும் பொருள்களோடு எல்லாம் பயின்று இது நிற்கிறது—இவன் நிற்கிறான். இவ்வாறு அனைத்தையும் தனக்கு இடமாகக்கொண்டு உலவி வருகிறது இப்பெரும் பொருள்; உலவி வருகிறான் இவன்.

அவை, தனக்கும் தன் திருவிளையாடலுக்கும் இடமாகும் நிலை ஒன்று. தான் அவற்றிற்கு இடமாக ஆதாரமாகும் நிலை மற்றொன்று. இஃது, அனைத்தினையும், முடிவில் ஒடுக்கி அவை எல்லாம் தன்னிடத்திருக்க நிற்கின்றது—இவன் நிற்கின்றான். ஒடுங்கி நிற்கும் நிலையாம் ஒடுங்கியாக இவன் ஒளிர்கின்றான்; சர்வசம்ஹார மூர்த்தியாக மிளிர்கின்றான். பின்னும் இவ்வாறே தோன்றி மறையும் உலகத் திருவிளையாடல் இந்த மாயாவியின் வழியே நடந்து வரும். "ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்" என்பர் மெய்கண்டார்.

நாராயணன் என்பதற்கு, "நாரம் அல்லது உயிர்ப் பொருள்களை இடம் ஆகக் கொண்டவன்; அவற்றிற்கு இடமாக இருப்பவன்" என்ற இருபொருள் உண்டு. இந்த இரண்டு பொருளையும் விளக்குவதுபோல இயன்-

114