பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவரூப நாடகம்

றன எல்லாம் பயின்றும் அகத்தடக்கியும் பெரும்பொருள் விளங்குகிறது. அவையேயாகியும், வேறே-தானே ஆகியும், அவையும் தானுமாய் உடனாய்க் கலந்தும் பெரும்பொருள் நிலைத்து நிற்கிறது; அவன் நிற்கிறான். அவையே ஆகி நிற்கும் நிலையும், உடனாகி நிற்கும் நிலையும், இதுவரை கூறப்பெற்றன. "என்னை இன்றி நீ இல்லை" என்று ஆழ்வார் பாடுவதன் பொருள் இவ்வாறு விளங்குகிறது. யான் இல்லையானால் அவன் மூளி.

உயிரில் பொருள்கள் இவனின்றி இல்லை; உயிர்களும் இவனின்றி இல்லை. இவற்றினைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனும் மறைப்பவனும் இவர்களை அருள்பவனும் அப்பெரும்பொருளாம் முதல்வனே. பெரும் பொருளின்றி ஒன்றும் இயங்குவது இல்லை. இப்பொருள் அறிவிலாப் பொருளாக இருத்தல் இயலாது. சிற்றறிவுடைய பொருளாகவும் இருத்தல் இயலாது. பேரறிவுடைய பொருளாதல் வேண்டும். இந்த அறிவு நாம் அறிந்த சுட்டறிவு அன்று. அனுபவமாய் விளங்கும் மெய்யுணர்வே இங்கு வேண்டும். சித்துவடிவம் இஃது. அனைத்து உணர்வையும் இயக்கி வைக்கும் இப்பேருணர்வு உணர்வின் தலையாய் மணிமுடியாய் அனைத்துணர்வின் பிழம்பாய் விளங்குதல் வேண்டும். மனிதன், தன் அறிவினைப் பாராட்டிக்கொள்கின்றான். ஆதலின், எல்லாம் ஆய் விளங்கி ஆளும் இப்பொருளை "அவன்" எனப்பேசுதல் மனிதப் பிறப்பின் இயல்பு. பேருணர்வுப் பிழம்பினை வேதமுதல்வன் என்ப. அனைத்து அறிவு நூலுக்கும் இவனே முதல்வன் என்று எங்கு உள்ளாரும் கூறுவர். "சாஸ்திர யோனித்வாத்" என்று பிரஹ்ம சூத்திரமும் கூற-

155