பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவரூப நாடகம

5

திகிரியோன் என்பது எழுவாய். அறிந்ததே எழுவாயாக வருதல் இயல்பு. அதனைப்பற்றிப் புதியதாகக் கூறுவதே பயனில்லை. அவ்வாறானால் திகிரியோன் அறிந்த பொருளாவது எப்படி? நாம் அறிந்த அற்புத இயற்கைச் சக்தியே எங்கும் தன் ஆணையைச் செலுத்திவருகிறது; ஆதலின், இந்த ஆணை நாம் அறிந்தது ஒன்றே ஆம். ஆனால், பெருந்தேவனார் காட்சியில் இந்த ஆணை தீதற விளங்குவதாகத் தோன்றுகிறது. அவர் கண்ட காட்சி- அவர் அறிந்த உண்மை—தீமை அறுதற்காக விளங்குவது! தீமை அறுதலால் பொலிவுபெற்று விளங்குவது! "தீது அற்று அற்றுவர விளங்கிக் கொண்டே வருவது" என்று பொருள்படும் இத்தொடர்க்கு நம் அனுபவத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ளலாம். இயற்கைத் திருவிளையாடல் இவ்வாறு தீதறுதலாகி இன்பவிளக்க மாதலையே முடிந்த முடிபாம் பயனாகக் கொண்டது என்று தாம் அறிந்த உண்மையை வற்புறுத்துகின்றார் புலவர். இந்தத் "திகிரியோனே. வேதமுதல்வன், ஆக, ஆக, ஆகப்பயின்று, அகத்தடக்கிய முதல்வன்" என்று முடிக்கின்றார். வேதமுதல்வன் என்பது ஆண்டவனது சொரூப இலக்கணமாகவும், அதற்குமுன் கூறப்பெறுபவை ஆண்டவனது தடத்த இலக்கணமாகவும் கொள்ளலாம். "நாம் அறிந்த நல்ல இன்ப இயற்கைச் சக்தியே அத்தகைய தடத்த இலக்கணமும் சொரூப இலக்கணமும் உடையதாகக் கூறப்பெறும் பொருள்," என முடிக்கிறார் பெருந்தேவனார்.

6

இப்பாட்டின் சொற்றொடர் அமைப்பினையும் யாவோசை நயத்தினையும் துய்த்துணர்ந்து இன்புறுதல்

119