பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

வேண்டும். அவற்றின் வழியேதான் நம் மனம் பொருள் விளக்கம் பெற்றுப் பெருந்தேவனார் அனுபவமே தன் அனுபவமாகுமாறு உருக்கொள்கிறது. "மாநிலம் சேவடி யாக" என்பதனை மூன்று சீராய்க் கூறினார் புலவர். மா எனவே பெருமை தோன்றுகிறது. நிலம் எனவே நிலைநிற்றல் விளங்குகிறது. அடியின் செம்மைக்கு ஏற்ப, நிலத்தின்பெருமை, மா என்பதால் வளந்தரும் பெருமையாகக் குறிக்கப்பெறுகிறது. மா என்றும், சே என்றும், வரும் நெடில்கள் பெருமையை நீட்டிக் காட்டுகின்றன மாநிலத்தினும் பெரிதாய்ப் பரந்துதோன்றுகின்ற கடலின் இயக்க ஆற்றலினும் அன்பினும் பெரிதும் ஈடுபட்டுக் கடல் பரந்து இருப்பதுபோலப் பரந்த ஐந்துசீராகவரக் கடலினை அவ்வாறு புனைந்துரைக்கின்றார். சங்கின் ஒலி வளை நரல் என்ற ஒலியாகக் கேட்கின்றது. "தூநீர்" என நெடிலாகவும், "வளைநரல்" எனக் குறிலாகவும், "பவ்வம்” என வகரத் தோடொன்றுபட்ட இதழ் ஒலிகளாகவும், "உடுக்கை" என வல்லோசையாகவும் இவ்வாறு பலவற்றின் கலப்பொலியாக அலைகடல்ஒலி பாட்டில் அமைகிறது. பருப்பொருளின் நின்றும் நுண்பொருளுக்குச் செல்வார், "விசும்பு மெய்யாக" என இரு சீரில் வன்மைமிக்குத் தோன்றாதபடி மென்மையும் இடைமையுமாம் அருவநிலை தோன்றக் கூறினார்; எல்லாமாய் இயங்கும் நிலையை வற்புறுத்த மேலும் இருசீரில் திசை கையாக என்றார்; தொழில் செய்வதன்றோ கை: திசை கை என வல்லெழுத்து, இகர ஐகார ஒலிகளோடு இயைந்து, தொழிலொலி முடிவின்றிப் போவதனைக் காட்டுமாறு செய்தார்; சந்திரனது அழகில் ஈடுபட்டு அதனை இருசீரால் கூறினார்; ஒப்புயர்வற்ற சூரியனை அடையேதும்

120