பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயோ அறிவாய்

தம் கண்மேல் நீர்வீழ்ச்சியைக் கண் மூடித் தாங்குகின்றனர்; அதனைக் கையால் திருப்பித் தோழிமார் கண்ணில் தாக்கவிடுகின்றனர் ; கண் சிவந்து களித்துச் செருக்கி ஆரவாரிக்கின்றனர். களித்து நிற்கின்றாள்—கண் சிவந்து நிற்கின்றாள் தலைவி. அமலங்களாய் விழிக்கும் அகன்ற கண்கள்—ஒன்றோடொன்று அன்புப் போட்டி இட்டு அகல விழித்து அழகு பெறும் கண்கள்—ஈர அன்புடைய மழைக்கண்கள்—எவர் கருத்தையும் கொள்ளை கொள்ளும் கடவுட் கண்கள்—அணங்கின் கண்கள்—இவற்றைக் காண்கிறான். (அவன் இது முன்னாள் கண்ட காட்சிதான். ஆனால், அன்றைய காட்சியின் பொருள் ஆழம் இன்று தோன்றுகிறது. கருத்தழிகிறான் அவன்). முன்னாள் காட்சி தொடர்கிறது உள்ளதே.

அவனையே நோக்கித் தோழிமாரோடு நடந்து செல்கிறாள் அவள். எங்கே? ஏன்? அவனை நோக்குகின்ற கண்களில் ஏதேனும் தோன்றுகிறதா? பேசாத பெரு மெளனம்—அதனை அறிவார் யார்? அவனைக் கண்ட மகிழ்ச்சி கண்களில் ஈர அன்பாய் மலர்கின்றது; முகமெல்லாம் மலர்கின்றது; புன்னகையாகப் பொலிகின்றது. தனித்துநின்றதுன்பமெலாம் மறைகின்றது. அவனைக் கண்டதும் மகிழ்கிறாள் ; களிக்கிறாள் ; இயங்குகிறாள் ; நடக்கிறாள் ; தோழிமாரோடும் மறைகிறாள். எங்கே? ஏன்?

4

இன்று அந்தக் காட்சியின் பொருள் விளங்குகின்றது. அவளது அருள், தன்னையே மாறிக் கொடுத்துதவித் தான் கெட்டு நிற்கும் பேரருள் இவ்வாறு

5