பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

எனக் காட்டிய அந்தப் பார்வையை எண்ணுந்தோறும் தனியவள் வாட்டமும் மனக்கண்ணெதிரே தோன்றுகிறது. அவ்வாட்டந்தவிர அவளுடைய கூட்டந்தான் உறுதிப் பொருள் என்கிறது நெஞ்சம். செய்வினை முடிப்பதற்குமுன் போதல் அறியாமையாகும்; அங்குள்ளாரும் எள்ளத்தக்க இளிவரவு நிலையேயாகும். ஆதலின், சிறிது தாழ்த்துச் செல்லுதலே தக்கது என்று இவ்வாறு கூறுகிறது அறிவு. இவ்விரண்டில் எதனைத் துணிவது? இரண்டும் பொருத்த முடையன அல்லவோ? இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட செயனிலை படாதபாடு படுகின்றது. "இரண்டு நுனியையும் இரண்டு யானைகள் பிடித்திழுக்கின்றன; கயிறோ தேய்ந்த பழங்கயிறு. இவற்றிற்கிடையே அந்தக் கயிறு அற வேண்டுவதுதான். இந்த நெஞ்சிற்கும் அறிவிற்கும் இடையில் அகப்பட்ட செயற்படும் உடம்பின் நிலையும் அந்தக் கயிற்றின் நிலையே"—இங்ஙனம் வாய்விட்டுப் புலம்புகின்றான் தலைவன். இவ்வாறு முத்தமிழ் நிலையை விளக்கித் தலைவன் பெருமையையும் புலப்படுத்தி, அதற்கேற்ற உவமையையுந்தேடிக்கொடுத்து, உலகுள்ளளவும் மறக்கத்தகாத இப்பாடலைப் பாடியவரைத் தேய்புரிப் பழங்கயிற்றினர் என அழைத்த நற்றிணைத் தமிழுலகம், தன் நன்றியையும் தன் தமிழ்ச் சுவையையும் நிலைநாட்டியது எனலாம். இவ்வாறே பாட்டாற் பெயர் பெற்ற புலவரின் பாடல்களை உணர்ந்து துய்ப்பது தமிழர் கடனாகும்.

3

நெடுந்தொகை எனும் அக்நானூற்றுப் பாடல்கள் போல மிகப்பெரியன அல்ல இதன் பாடல்கள்; பொருள் முடிபு காண வருந்த வேண்டுவதில்லை. குறுந்தொகைப்

128