பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பேசிய நாடகம்

பாடல்கள்போல மிகச்சிறியன அல்ல இவை; பொருள் ஆழங் காணாது அலையவேண்டுவ தில்லை. இடை நிகரனவான பாடல்களே இந்த நற்றிணையில் உள்ளன. இரண்டன் அழகும் இதனிடை உண்டு. அகத்திணைப் பாடல்களுக்குத் "திணை" எனப் பெயர் வழங்கும் மரபு உண்டு. திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது என்ற நூல்களின் பெயர்களைக் காண்க. அத்தகைய "திணை" என்ற பெயரோடு "நல்" என்ற அடையும் சேர வழங்குகிறது இந்நூல். "நல்ல குறுந்தொகை" என்று பிற்காலத்தார் பாடினார்கள். ஆனால் தொகுத்த காலத்தே "நல்" என்ற அடை இந்நூலுக்குத்தான் இடப்பட்டது என்பதை நாம் மறத்தலாகாது. ஆனாலும், இத்தொகை நூல்களில் வரும் பாடல்கள் எல்லாம் ஒரு தகையனவேயாம்; இவற்றில் ஏற்றத்தாழ்வு கூறுவதற்கு இல்லை.

4

இவற்றை, ஆசிரியர் முறையாகத் தொகுத்துச் "சைவ சித்தாந்த சமாசம்" நமக்குப் பெரியதோர் உதவி புரிந்திருக்கிறது. இப்போது தமிழுக்கு வந்துள்ள நல்ல காலத்தையே ஈதும் குறிக்கிறது. நற்றிணை நூல் பலர் கையிலும் பரவிக் கூத்தாடுமாறு செய்து, அதன் பொருளையும் விளங்க எழுதி உதவிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயரை நாம் மறக்கப் போமா? அவரோடு பழகிய மறைமலையடிகள், திரு.வி.க. முதலியவர்கள் அவருடைய சிறந்த தமிழன்பையும் உயர்ந்த ஆராய்ச்சியையும் புகழக் கேட்டுள்ளேன். இந்த நூல் அச்சாகி வெளிவருவதைக் காணாமலே அப்பெரியார் போனது மிகவும் மனத்தை வருத்துகின்றது. அவர் செய்த உரையினும் சிறந்த உரை சில பாடல்களுக்குச் சொல்லுதல் கூடும். ஆனால், நற்றிணை என்ற

129

9