பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தோன்றுகிறது. பார்வையும் முறுவலும் அவளது தலையன்பின் மலர்ச்சி; அவள் தந்த பரிசில். மறக்க-முடியுமா அவன்? தான் அற்ற நிலையில் அவனைக் கண்டதும் தன் தனிநிலை எல்லாம் மறந்து நிற்கிறாள் அவள். அவனையே நம்புகிறாள். இவ்வளவும் அவனுக்கு இன்று தெளிவாகிறது.

"ஐயோ, அறியாமற் போனேனே ! இந்தச் சீரணங்கு —பேரருளின் திருவருளால் வீட்டிலாடி வந்தவள்—எனக்காக வீட்டை விட்டுப் புறம் புறம் திரிந்தாள்—தோட்டத்தில் ஆடினாள்—தினைப்புனம் காத்தாள்; கிளியோடும் குருவியோடும் பேசினாள்; அருவியோடு ஒன்றாய் ஆடினாள்; இவ்வாறு தன் அன்பைச் சுற்றும் முற்றும் அகல அகலப் பரப்பிவிட்டு அலர்கிறாள். என் குடியையும் அதனுள் அடக்கிக்கொண்டு என் வீட்டில் என்னை மணந்து வாழ விரும்பிய அருளுள்ளத்தின் மலர்ச்சியே இது; வெற்றாட்டம் என வெறுமனே நின்றேன். இத்தனைக்கும் பொருள் இதுவே அன்றோ? அதனை உணராமற் போனேன். 'கடையை விரித்தேன்; வாங்க வேண்டியவர் வாங்கவில்லை. கடையைச் சுருட்டிக்கொண்டேன்' என்றுகூட முணுமுணுக்காமல் வீடு திரும்பினாள்" என்று பெருமூச்சு விடுகிறான்.

"அம் மட்டுமா!" என்று புகைந்தெழுகிறது அவன் உள்ளம். "பாழான நெஞ்சமே! நீ இதனை அறிந்தாயா? உயிர்க்கு உயிராம் தோழிமாரையும் பிரியத் துணிந்தாள்; பெற்ற தாயாரையும் பிரியத் துணிந்தாள்; உயிரினும் சிறந்த நாணமும் விட்டாள்; அச்சம் நீங்கினாள்; மடம் எலாம் ஒழிந்தாள்; உன்னோடு அளவளாவினாள்; புறத்தே எல்லாம் நம்மைக் காண அலைந்து திரிந்தாள். நீ என்ன

6