பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

மக்கள் மட்டும் அல்லர்; விலங்குகளும் பறவைகளும் அன்பாய் வாழ்கின்ற நிலையையும் மக்களது அன்பு வாழ்க்கைக்கெதிரே புனைந்துரைத்துப் போவதை, இந்நூலுள் எங்கும் பார்க்கின்றோம்.

"வண்புறப் புறவின் செங்காற் சேவல்
களரி ஓங்கிய கவைமுட் கள்ளி
முளரியங் குடம்பை ஈன்றிளைப் பட்ட
வுயவுநடைப் பேடை உணீஇய மன்னர்
முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம்" (நற்.384)

என்று முட்டையிட்ட பெண் புறாவிற்காகப் பாழடைந்து பாலையாய ஊர்களிலுள்ள நெல்லைக் கொண்டுவரும் ஆண் புறாவின் அன்பைப் புனைந்துரைத்தல் வாயிலாகப் பாலையின் சிறப்பை உணர்த்திய நயமும், தலைவன் சென்று இல்லறம் நிகழ்த்தப்போகிற பெருமையை இதன் வழியாக இறைச்சிப் பொருளாக உணர்த்தும் குறிப்பும் பாராட்டத் தக்கன. பெண் புலியின் பசிக்கு வருந்திய ஆண் புலி, யானையைக் கொல்வதாக மற்றொரு புலவர் கனாக்காண்கிறார்:

"கல்லயற் கலித்த கருங்கால் வேங்கை
அலங்கலந் தொடலை அன்ன குருளை
வயப்புனிற் றிரும்பிணப் பசித்தென வயப்புலி
புகர்முகஞ் சிதையத் தாக்கிக் களிறட்(டு)
உருமிசை உரறும் உட்குவரு நடுநாள்" (நற்.383)

எனக் கொடிய விலங்குகளிடத்தும், அன்பு, திருக்கூத்தாடுவதைக் காண்க. இத்தகைய பாடல்கள் பலப்பல.

6

ஓரறிவு உயிர்களையும், உடன் பிறந்தாராகக் கொண்டுவாழும் உயர் நிலையையும் இங்குக் காண்கிறோம். சகுந்தலை,

132