பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

நெஞ்சே! நீயோ அவளை அறிவாய்? நீயோ அறிவாய்?" என்று தோழியோடு பேசிய தனை நினைத்துப் புலம்புகிறான்.

5

தோழியின் பேச்சும் நினைவுக்கு வருகிறது. சொல்கொண்டு தோழி எழுதிய உயிர் ஓவியம் அவன் மனக்கண் எதிரே தோன்றுகிறது இதோ.

மிக நீண்டு வளர்ந்த தினையை வளர்க்கும் மலை நாட்டார் வாழும் குறிச்சிச் சீறூர் தெரிகிறது. தோட்டமும், நடுவில் வீடுமாக அமைந்த குடியிருப்புக்களின் முடிமணியாக நண்ணடுவே அழகாக ஒரு தோட்டம் மிகப் பரந்து விளங்குகிறது. அகன்று நீண்ட தோட்டத்தின் இடையே எழுந்து ஓங்குகிறது தலைவி வீடு—அவள் வீடு.

அவ் வீட்டின் முற்றத்தே ஆர அமரக் கூடி இருக்கின்றனர் குன்றக் குறவர்கள். அவர்கள் தினை கொய்ய நாள் பார்க்கிறார்கள். அது தான் மலையரசன் வீடு. மலைநாடனின் உயிரான காதல் மகளே அவள். "ஒரே பெண்—இளம் பெண்—அவன் அன்பையே நம்பும் பெண்—நன் மலைநாடன் காதல் மகள்—மலையரசனுக்கு உயிரான மகள்" என்று தோழி கூறியது காதில் விழுகிறது.

"அன்புச் சமுதாயத்தின் உண்மை நிலையை என் உளங் கொளக் கூறி வழி காட்டுகிறாள்" என முன் அவன் உணரவில்லை. "இந்த இன்பச் சூழலை—அன்பான தந்தையைப் பிரிவாளோ?" என்றே தோழி வினவுவதாகப் பொருள் கொள்கிறான்; "நான் அறிவேன் அவள்

8