பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயோ அறிவாய்

மனத்தை. யான் இன்றி அவள் வாழாள் என்பது தோன்றப் பேசுகிறான்.

"கொழுவிய தினையின் விளைவு — செழுமையான பலாப்பழம் — அடர்ந்திருண்ட தோட்டம் — மலைநாடன் எம் அப்பன்" என்று தோழி கூறிய விளக்கம் ஏன் ? "அவள் குடிக்கு ஒவ்வாத குடி அவன் குடி” என்று தோழி கருதுகிறாள் என நினைக்கின்றான். "ஒத்த குடியும் ஒவ்வாத குடியும் யார் அறிவார்? என்னோடு மனமொத்துப்போன அவள் அன்றோ அறிவாள்? நீ எப்படி அறிவாய்?" என்று உள்ளுக்குள் முணுமுணுக்கிறான் அவன்.

"சேற்றிற் பிறக்கவில்லையா செந்தாமரை" என்று குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறான்; "இவ்வாறு பேசி எங்களைப் பிரித்துவைக்க முடியாது" என்பது தோழி மனத்தில் உறைக்கும்படி உறுதி கூறுகிறான்.

முன் நடந்தது இப்படி.

6

"இவற்றின் உண்மைப் பொருளை அறியாமற் போனேனே! தோழி மனம் புண்பட என்ன என்ன கூறினேன்!" எனத் தன்னைத் தானே நொந்துகொள்கிறான் அவன், இன்று.

"ஐயோ! அறியாமையால், தோழியை அறியாதவள் என்றேனே! தோழி காட்டிய அன்பு வழியில்—இயற்கை வழியில் சென்று அவளை அடைய முடியாமல் அறியாமைச் செருக்கில் ஆழ்ந்து எனக்கும் அவளுக்கும் கேடு சூழ்ந்தேனே!" எனக் கவலைப்பட்டுக் கருத்தழிகிறான் அவன்.

9